Tag: தட்டுப்பாடு

HomeTagsதட்டுப்பாடு

யாழ். வைத்தியசாலையில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ! பொதுமக்களிடம் விடுத்த வேண்டுகோள் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் O+ இரத்த வகைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் அந்த வகை இரத்தம் உள்ள குருதி கொடையாளர்கள் யாழ்.இரத்த வங்கிக்கு நேரில் வருகை தந்து குருதி கொடை வழங்குமாறு இரத்த வங்கியினர் அறிவித்துள்ளனர். அதேவேளை யாழ்ப்பாணத்தில் இரத்த தான முகாம்களை நடாத்த விரும்புவோரை அதற்கான முயற்சிகளை முன்னெடுக்குமாறும் , மேலதிக விபரங்களை தெரிந்து கொள்வதற்கு 0772105375 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு ?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளதால் இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட கூடும் என எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த கால அவகாசம் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினத்திற்கு தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...