சமூக வலைதளத்தில் பிரபலமாகி, பின்னர் கன்னடம், தெலுங்கு என சிறிய பட்ஜெட் படங்களில் கதாநாயகியாகி ‘யுவர்ஸ் லவ்விங்லி, தி டிரிப் உட்பட சில படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகில் வலம் வருபவர் நடிகை சவும்யா ஷெட்டி. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தை சேர்ந்த இவருக்கு, சில நாட்களுக்கு முன் அதே விசாகப்பட்டினத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பிரசாத் என்பவரின் மகளுடன் நட்பு ஏற்பட்டது. பிரசாத்தின் மகள் அழைத்ததால், சவும்யா ஷெட்டி அவரது வீட்டிற்கு சென்றார். இதனால் […]
பதுளையில் இருந்து அம்பாறைக்கு சென்ற இளைஞன் தனது காதலியுடன் விடுதியில் தங்குவதற்குப் பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபா பணத்தைத் திருடிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பஸ் நிலையத்தில் இவரது காதலியை நிற்குமாறு கூறிவிட்டு அந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட பிரபல வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து குறித்த இளைஞன் பணத்தைத் திருடியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. […]
காதலர் தினத்தன்று தனது மனைவிக்கு பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டது. திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. […]
கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் சான்றுப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த கஞ்சா திருடப்பட்டிருந்தது. இதனையடுத்து கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்பு பொலீஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உப்புல செனவரத்தினவின் கீழ் இயங்கி வருகின்ற மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரின் பொறுப்பதிகாரி பி.ஐ.மங்கள தலைமையிலான பொலீஸார் இரகசிய தேடுதலை மேற்கொண்டிருந்த வேளையில் இந் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவர் நீதிமன்ற பணியாளர். இருவர் நீதிமன்ற சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள். கைதானவர்களில் மூன்று பேர் கிளிநொச்சியை சேர்ந்தவர்கள். கைதான நீதிமன்ற பணியாளர் அம்பாறையை சேர்ந்தவர். நீதிமன்ற களஞ்சிய அறையை உடைத்து கஞ்சா திருடி, அதனை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...