பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இதற்காக பெருமளவான பக்தர்கள் தமது படகுகளில் ஆலயத்திற்கு சென்றனர். இதன்போது சென்ற இரண்டு படகுகள் மோதுண்ட விபத்தில் காயமடைந்த எழு பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலைதீவு திருவிழாவுக்கு சென்ற படகுகள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா இன்று சனிக்கிழமை...
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய 2024 ம் வருடத்திற்கான திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பயணமாகி உள்ளனர். இந்த நிலையில் இன்றைய தினம் (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு ஆலயத்திற்கு சென்றுள்ளனர். இன்று மலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை காலையில் யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்கு தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக் கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் திருவிழா […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...