வள்ளிபுனம் பகுதியில் லொட்டரி விற்பனை நிலையம் ஒன்று தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள லொத்தர் விற்பனை நிலையம் ஒன்று கடந்த (19.02.2024) இரவு சந்தேகத்திற்கு இடமான முறையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விற்பனை நிலையத்திற்குள் கதிரை,மேசை ஒன்றும் ,120 லொத்தர் ரிக்கட்டுக்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இனம் தெரியாதவர்களால் தீ மூட்டப்பட்டதா? அல்லது வேறு அசம்பாவிதத்தினால் தீ ஏற்பட்டதா? போன்ற பல்வேறு கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை […]
யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் வாள்வெட்டு வன்முறை கும்பலொன்றினால் மோட்டார் வண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காரைநகர் ஆலடிப் பகுதியில் நேற்று இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வன்முறை கும்பல் தப்பிச் சென்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...