இலங்கை கல்வி அமைச்சரின் கலாநிதிப் பட்டத்தை நீக்கி வடமாகாண கல்விப் பணிப்பாளர் யோன் குயின்ரேஸ் கடிதம் ஒன்றை எழுதிய சம்பவம் கல்வித் திணைக்களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேமஜயந்தவின் கலாநிதி பட்டத்தை நீக்கி திரு சுசில் பிறேமஜயந்த என வட மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரேஸ் அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் காணப்படுகிறது . இலங்கை கல்வி அமைச்சரின் சுசில் பிறேமஜயந்த ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி மட்டுமல்லாது கலாநிதிப் பட்டத்தையும் பெற்றவர். […]
பளை மாசார் பகுதியில் மூன்றரை கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று(05.03.2024) செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் சூட்சுமமான முறையில் மறைத்து போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து வெற்றிலைக்கேணி கடற்படையுடன் இணைந்து அதிரடிப்படையினர் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த இளைஞனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞன் உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் கைப்பற்றப்பட்ட போதை பொருள் மற்றும் மோட்டார்சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக இளைஞன் பொலிசாரிடம் […]
இன்று புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனத்தை போக்குவரத்து கடமையில் இருந்த சாவகச்சேரி பொலிசார் மறித்துள்ளனர். எனினும் குறித்த டிப்பர் நிறுத்தாமல் சென்றுள்ளது. இதனையடுத்து டிப்பர் வாகனத்தை துரத்திச் சென்ற பொலிசார் சாவகச்சேரி சுற்றுவட்டத்தில் வைத்து அதனை மறித்துள்ளனர். இதன்போது டிப்பர் சாரதி தப்பிச் சென்றுள்ளார். தமது ஊரில் மண் கடத்தல் இடம்பெறுவதை அறிந்த அந்த ஊர் இளைஞர்கள் மூவர் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் டிப்பரை […]
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் […]
காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின்...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போதே அவர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நகரப்பகுதியைச் சேர்ந்த அவர்கள், யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மாலை 6 மணிமுதல் இரவு 9 வரையான நேரத்துக்குள் வீதியில் பயணித்தவர்களை இலக்குவைத்து நீண்டகாலமாக வழிப்பறியில் ஈடுபட்டுவந்துள்ளமை முதல்கட்ட விசாரணையின் தெரியவந்துள்ளது. கைதானவர்கள் பிரதான […]
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வழிப்பறிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினரால் நேற்றுக் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய...
இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட இருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். இத்தாலி தூதரகத்துக்குச் சேவைக்காக வரும் நபர்களிடம் இத்தாலியில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி வெளியாட்கள் பணம் பெற்று மோசடியில் ஈடுபடுவதாக இத்தாலிய தூதரகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்படி சந்தேக நபர்கள் 26 இலட்சம் ரூபாவை […]
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட கிரேக்க சுற்றுலா விசாக்களைப் பயன்படுத்தி ஐரோப்பாவுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை (23) அதிகாலை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடையவர், மற்றையவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர். அதிகாலை 4.35 மணியளவில் தோஹா நோக்கிப் புறப்படவிருந்த கத்தார் எயார்வேஸின் QRR-663 விமானத்தில் பயணிப்பதற்காக அவர்கள் இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர். முதலில் கத்தாரின் தோஹாவுக்கும், அங்கிருந்து […]
யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(23) காலை இடம்பெற்றபோது பெருமளவான பக்தர்கள் ஆலயத்தில் கூடியிருந்தனர். இதனை சாதகமாக பயன்படுத்தி நகைத் திருட்டில் ஈடுபட்ட கொழும்பு கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவரும் […]
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குரக்கொட நகரின் இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 671 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபரொருவர் தமிழகத்தில் தலைமறைவாகியிருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய வேளை நேற்றைய தினம் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணம் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய இந்த […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...