தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது நேற்று (14) பி.ப 1.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது. கல்லூரி அதிபர் ம.மணிசேகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக பழையமாணவனும், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் திட்டமிடல் பணிபபாளரும் .சி.சிவபாலா அவர்களும் , சிறப்பு விருந்தினராக தெல்லிபபழை கோட்டக்கல்விப் பணிப்பாளர் வே.அரசகேசரி மற்றும் கல்லூரியின் ஐக்கிய இராட்சிய பழையமாணவர் சங்க பிரதிநிதி அ.வமலதாசனும் கலந்துகொண்டனர். இதேவேளை இந் நிகழ்வில் பாடசாலை சமூகத்தினர், பெற்றோர் […]
கீாிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி நந்தகுமார் அவா்களினால் விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தற்சமயம் கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் இடம்பெற்றுவரும் நிலையில் சிவராத்திரி தினமான எதிர்வரும் 8 ம் திகதி ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் வழமை போல் வழிபாடுகளில் ஈடுபடுவர். எனவே இவ் ஆலயம் மற்றும் அதணை சூழ்ந்த பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளாக வருகைதருபவர்கள் […]
கீாிமலை நகுலேஸ்வரா் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேசத்தினை புகைத்தல் மற்றும் மதுபாவனையற்ற பிரதேசமாக பாதுகாக்கும் நோக்கில் தெல்லிப்பழை சுகாதர வைத்திய அதிகாாி நந்தகுமார் அவா்களினால் விழிப்புணர்வு அறிவித்தல் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தற்சமயம் ...
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று (24) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. கடந்த 14 ம் திகதி ஆரம்பமான லட்சார்ச்சனையானது தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் மாசி மகத் தீர்த்தத்துடன் நிறைவுற்றது. இந்த உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளினை பெற்றுச் சென்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன . கருவறையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் எனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் முத்துமாரி யம்மனுக்கு மகா இலச்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது. இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தெல்லிப்பழை காசி விநாயகர் தேவஸ்தானத்தில் ஆலயத்திற்கு பயன்தரக்கூடிய ஒரு தொகுதி மரக்கன்றுகள் இன்று(9) .மாலை 4.00 மணியளவில் நாட்டப்பட்டது. காசி விநாயகர் ஆலய தொண்டர்களும் ; தெல்லிப்பழை பாலர் ஞானோதய சபை சிறுவர்களும் இணைந்து இம் மரநடுகை முன்னெடுக்கப்பட்டது.தினசரி வெள்ளிக்கிழமைகளில் அறநெறி வகுப்புக்கள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் நிலையில் அதனுடன் இணைந்த வகையில் சமுகப் பற்றையும் ஏற்படுத்துமுகமாகவே இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...