Tag: படுகொலை

HomeTagsபடுகொலை

வட்டு இளைஞன் படுகொலை ஐந்தாவது சந்தேகநபரை அடையாளம் காண்பித்த மனைவி

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதாகியுள்ளவர்களில் ஐந்தாவது சந்தேகநபரை கொல்லப்பட்ட இளைஞனின் மனைவி அடையாளம் காட்டியுள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞன் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு சென்று விட்டு , மோட்டார் சைக்கிளில் திரும்பும் வேளை பொன்னாலை பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை முகாமிற்கு முன்பாக வைத்து மனைவியுடன் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் இதுவரையில் 06 பேரை கைது செய்துள்ளனர். […]

வட்டுக்கோட்டையில் பவித்திரன் படுகொலை – மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

தவச்செல்வம் பவித்திரனின் கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றையதினம் யாழ்ப்மாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு , தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த இளைஞனையும் , அவரது மனைவியையும் பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படை முகாமிற்கு அருகில் வைத்து , வன்முறை கும்பல் ஒன்றினால் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்டு , இளைஞன் மிக மோசமான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு , […]

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை – கைதனவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி […]

6 பேர் படுகொலை – சந்தேகநபருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14) நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் நேற்று (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

ஒருதலைக் காதல் விவகாரம் இலங்கையில் 17 வயது மாணவி வெட்டி படுகொலை..!

தென் இலங்கையில் பாடசாலை மாணவி ஒருவர் பட்டப்பகலில் வீட்டில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொடூர சம்பவம் கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் நேற்று (24) முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய எஸ்.டயானா என்ற மாணவியே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஒருதலைக் காதல் விவகாரத்தால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடையவராக கருதப்படும்  சந்தேகநபரான 21 […]

கிரிக்கட் மட்டையால் தாக்கி ஒருவர் படுகொலை..!

பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் ​பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட 10 மீனவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலில் திடீரென ஏற்றப்பட்ட தேசிய கொடியால் குழப்பம்..!{படங்கள்}

1994.02.18 அன்று வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்கால் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கட்டைக்காட்டை சேர்ந்த 10 மீனவர்களது 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில்(18) அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் இலங்கையின் தேசிய கொடி திடீரென ஏற்றப்பட்டதால் உறவுகளை இழந்த மக்கள் அதிர்ச்சியடைந்து தமது எதிர்ப்பை வெளிக்காட்டினர் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் முன்னின்று செயற்படுத்திய இந்த நிகழ்வில் தேசிய கொடி ஏற்றுவது தொடர்பாக தமக்கு […]

கிளிவெட்டி குமாரபுரம் படுகொலை நினைவேந்தல்

கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் 11.02.2024 அன்று ஞாயிற்றுக்கிழமை குமாரபுரத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது பொதுமக்கள் உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மலர்தூவி, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

பெலியத்த படுகொலை; இன்னுமொருவர் கைது!

பெலியத்தையில் ஜனவரி 22 ஆம் திகதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டத்தரணி ஊடாக பெலியத்த பொலிஸாரிடம் நேற்று ஆஜராகிய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர், இம்புல்கொட அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐவர் சுட்டு படுகொலை: ஒருவர் கைது வாகனமும் சிக்கியது

பெலியத்தவில் திங்கட்கிழமை (22) ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கிய இலங்கையைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் அதற்குப் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மாத்தறை...

சிவில் விமான சேவைகள் அதிகாரி கொடூரமாக படுகொலை : சந்தேகநபர் கைது

நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த வேளையில் காரில் வந்த சந்தேகநபர் ஒருவர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் சிவில் விமான சேவையின் பெண் உத்தியேகத்தர் ஒருவரின் கழுத்தை வெட்டிவிட்டு தப்பிச் சென்றவர் கைது...

பிறந்த சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் பிறந்த சிசுவை படு​கொலை செய்த சிசுவின் தாய்க்கு, ஐந்து வருடகால கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் கடந்த 2017 ஆம்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...