வலிமைப் பெண் என்ற பட்டத்தோடு தங்கப்பதக்கத்தினை பெற்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த பளு தூக்கல் வீராங்கனை தனா அவர்கள் சாதனை. யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை பிறப்பிடமாக கொண்ட தனலட்சுமி முத்துக்குமார் அவர்கள் கடந்த இரண்டாம் திகதி கொழும்பில் இடம்பெற்ற Strongman championships என்கின்ற பளு தூக்கல் போட்டியில் 80 கிலோ பிளஸ் பார பிரிவில் பங்குகொண்டு முதலிடம் பெற்று வலிமை பெண் என்கின்ற பட்டத்தை பெற்றுகொண்டுள்ளார் இவர் ஏற்கனவே national power lifting champions ஆக […]
முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் தனது 98 ஆவது வயதில் (27) காலமானார். நிதியமைச்சர் பதவியை வகித்த காலத்தில் அவர் 11 வரவு செலவுத் திட்டங்களைச் சமர்ப்பித்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கைவல்யா என்ற 4 மாதக் குழந்தை நோபல் உலக சாதனை படைத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. குறித்த குழந்தை மிகச்சிறிய வயதிலேயே காய்கறி, பழங்கள், பறவைகள், புகைப்படங்கள் என 120 வெவ்வேறு பொருட்களை அடையாளம் காணும் திறனால் இந்த சாதனையை படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குழந்தையின் திறமையை உலகிற்கு வெளிப்படுத்தவதற்கு தனது குழந்தையின் திறமையை வீடியோவாக நோபல் உலக சாதனைக்கு அனுப்பியதாக குழந்தையின் தாயார் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...