திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு […]
கம்பளை, கல்கெடியாவ பிரதேசத்தில் உள்ள பாறை சரிவில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிரிந்த, ஹொடியாதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அனோதா பழம் பறிக்க நேற்று (19) சென்ற வேளையில் குறித்த இடத்திலுள்ள பாறை சரிவில் தவறி விழுந்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...