இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் யாழ்ப்பாணம் மாவட்ட வியாபாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது வியாபாரிகள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை தெரிவித்திருந்தனர்.
வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களால் ஆராய்ந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அபயம் பிரிவினரால், வவுனியா பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது. உடனடியாக செயற்பட்ட வவுனியா பிரதேச செயலாளர், குறித்த சிறுவனையும், இளம் […]
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். நாடு தழுவிய யுக்திய நடவடிக்கையுடன் […]
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீர் தாங்கி 12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் 14 வருடங்களாக இந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் திகதி இந்த ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து மதிய உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த ஹோட்டலின் மேல்மாடியில் […]
நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட நிறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 100 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வடமராட்சியில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் கிளை அலுவலகத்தில் MA.சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றபோது இதனை தெரிவித்தார்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடலில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாக பணியாற்றிய ஒருவரே இவ்வாறு கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் நேற்று (13) இரவு வேலைக்காக வந்திருந்த நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட...
நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்திற்கு சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், குறித்த சட்டம் இன்று (01) முதல் அமுலுக்கு வருகிறது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் கடந்த 27 ஆம் திகதி கையெழுத்திட்டிருந்தமை...
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் பெண் ஒருவரை தகாத வார்த்தைகளால் கடிந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறுமாறு மிரட்டிய சம்பவம் ஒன்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றிருந்தது.
குறித்த...
யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளி உறவினர் ஒருவரை கொடூரமாக தாக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்!! வீடியோ
சற்று முன் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள வீடியோப் பதிவினை நாம் இங்கு தந்துள்ளோம்
என்ன நடக்குது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ?...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...