ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் நேற்று(13)) ஒருவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார்.சட்டவிரோத செயற்பாடுகளை ஒடுக்கும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் வெற்றிலைக்கேணியை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மீனவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...