Tag: பாரிய

HomeTagsபாரிய

வெடுக்குநாறிமலையில் காவல்துறையின் அடாவடி – வெடிக்கப்போகும் பாரிய போராட்டம்.

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை பாராளுமன்றை புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்து உதவுமாறு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு கோரியுள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் அகத்தியர் அடிகளார், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை கடிதங்களை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் ,மகா சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் நடைபெற்ற அரசகட்டமைப்பின் அத்துமீறல்கள் மற்றும் காவல்துறையினரின் அட்டுழியங்கள் என்பவற்றின் தொடர் விளைவாக ஆலய பூசகர், தர்மகர்த்தாக்கள் உட்பட எண்மர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள். இந்த நிலையில் இலங்கையில் வட கிழக்கில் தொடர்ச்சியாக சைவ ஆலயங்கள் குறிப்பாக புராதன ஆதி சிவன் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு தமிழர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்வதும் அதே நேரம் அவை அரச இயந்திரத்தின் உதவியுடன் குறிப்பாக காவல்துறை, தொல்லியல், வனவள் திணைக்களங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு […]

மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை..!{படங்கள்}

மஸ்கெலியா கினிகத்தேன பிரதான வீதியில் நோட்டன் அட்லிஸ் பகுதியில் இன்று மதியம் பாரிய மரம் ஒன்று சாய்ந்ததால் பல மணி நேரம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது என நோட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் இன்று மதியம் இப் பகுதியில் வீசிய கடும் காற்றினால் நோட்டன் தியகல பிரதான வீதியில் பாரிய வாகை மரம் சரிந்ததால் சுமார் நான்கு மணித்தியாலம் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தது. வீதி அபிவிருத்தி அதிகாரசபை உடன் […]

பாரிய வீழ்ச்சியை சந்தித்த மரக்கறிகள்..!{படங்கள்}

மலையக மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்து வருவதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மொத்த மற்றும் சில்லறை விலைகளில் பெருமளவில் அதிகரித்துள்ள மலையக மரக்கறிகளின் விலைகள் தற்போது வழமை நிலையை அடைந்துள்ளதாகவும், இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் மரக்கறிகள் எனவும் நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மலையகத்தில் நிலவும் நல்ல காலநிலை காரணமாக திட்டமிட்டபடி அறுவடை கிடைத்துள்ளது. எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலம் […]

நாளையும் மீனவர்கள் யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கோரி, வடக்கு மாகாண மீனவர்கள் நாளையதினம் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்தாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அன்னலிங்கம் அன்னராசா இவ்வாறு தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த பேரணியில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். நாளை (05) காலை 10:30 மணிக்கு […]

மீண்டும் முற்றுகையிடப்படும் இந்திய துணைத்தூரகம்-யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!

கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். அந்த வகையில் இந்த போராட்டமானது ஐந்தாம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை நடைபெறும் என இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது இல்லத்தில் நடைபெற்ற […]

மீண்டும் முற்றுகையிடப்படும் இந்திய துணைத்தூரகம்-யாழில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு..!

கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைதீவிலே நடைபெற்றது. முல்லைத்தீவில் நடைபெற்ற கூட்டத்தில் ஐந்தாம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை...

தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது..!

தமிழர் தாயகத்தில் இன்று ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்சி முரண்பாடுகள் தமிழ் மக்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு தேர்தல்கள் பின் தள்ளப்பட்டு வருகிறது. இது மக்களுக்கு ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார். வருடந்தோறும் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு தவக்காலத்தில்  விடுக்கும் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.      குறித்த  தவக்கால மடலில் மேலும் தெரிவிக்கையில்,,,,  திருச்சபையின் திருவழிபாட்டு […]

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் எதிர் வரும் 20ம் திகதி பாரிய போராட்டம்-அனைவருக்கும் அழைப்பு..!

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு சர்வதேச நீதி வேண்டி எதிர்வரும் 20ம் திகதி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் ஆதரவு வழங்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமேல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி அழைப்பு விடுத்துள்ளார். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அழைப்பு விடுத்திருந்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் நிறைவடைந்து எட்டு ஆண்டுகள் ஆகின்றது. எங்களுடைய பிள்ளைகளுக்கு இலங்கை அரசாங்கம் நீதி வழங்காது சர்வதேசத்திடம் […]

திருமலை கின்னியா பகுதியில் வரவுள்ள பாரிய மாற்றம்..!

திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…

இன்று காலை வீசிய கடும் காற்றில் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையில் பாரிய மரம் சரிந்ததால் வாகன போக்குவரத்து சில மணி நேரங்களுக்கு தடை ஏற்பட்டது.

மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் போதும் இன்று காலை வேளையில் மத்திய மலைநாட்டில் கடும் காற்று வீசியதால் ஹட்டன் நோட்டன் பிரதான சாலையின் உள்ள வனராஜா தோட்ட பகுதியில் உள்ள பாரிய வாகை சரிந்து விழுந்தது அதனால் அவ் வீதியூடாக வாகனங்கள் போக்குவரத்து சில மணி நேரம் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் அந்த இடத்தில் சாய்ந்த பாரிய மரத்தை வொட்டி அகற்றினர். அனைத்து தொடர்ந்து போக்குவரத்து வழமைக்கு […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...