பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துமிந்த ஜயதிலக தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். துமிந்த ஜயதிலக்க, […]
பாதாள உலகக் கும்பல்களின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரான்ஸூக்கு தப்பிச் சென்ற கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் நிலையத் தளபதி துமிந்த ஜயதிலக்க, வெளிநாடு செல்ல திட்டமிட்டு இவ்வாறு கூறியதாகத்...
ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில் அது நடத்தப்படும் என்றும், பொதுத் தேர்தலுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல் ஆணையத்துடன் அரசு இணைந்து செயல்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...