Tag: பெரும்

HomeTagsபெரும்

பழம் பெரும் சிங்கள நடிகை உயிரிழப்பு..!

பழம்பெரும் சிங்கள நடிகை ரம்யா வணிகசேகர காலமானார். இவர் பத்திரிகையாளராகவும், வானொலி செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். ரம்யா வணிகசேகர காலமாகும் போது அவருக்கு வயது 73 ஆகும்.

வடக்கின் பெரும் போர்-யாழ் நகர் எங்கும் பெரு விழா..!{படங்கள்}

வடக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டி இன்று காலை ஆரம்பமானது. 117வது முறையாக இடம்பெறும் இப்போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று தினங்கள் நடைபெறுகின்றன. இன்று காலை 9.30 மணியளவில் இரண்டு கல்லூரிகளினதும் கீதங்களுடன் போட்டி ஆரம்பமானது.

வடக்கின் பெரும் போர்-தென்னிலங்கை ஊடகங்களுக்கு விலை போன பரிதாபம்-ஆர்வலர்கள் கொந்தளிப்பு..!

வடக்கின் பெரும்போர் துடுப்பாட்ட போட்டி நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் தென்னிலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு நிறுவனம் ஒன்றின் சதி நடவடிக்கையால் ஊடகங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளது. யாழ்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 117வருட பாரம்பரியத்தைக்கொண்ட வடக்கின் பெரும்போர் துடுப்பாட்டப் போட்டியில் இரு கல்லூரி வீரர்கள் ஊடகங்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டு, போட்டிகளில் பார்வையாளர்கள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தொடர்பில் இரு கல்லூரி அதிபர்களால் அறிவிக்கபடுவது வழமையானது. எனினும் இம்முறை வழமைக்கு மாறாக வடக்கின் பெரும்போர் குறித்து ஊடகங்களுக்கு […]

ஆடி அடங்கிய மரக்கறிகள் இன்று பெரும் வீழ்ச்சி..!

மரக்கறிகளின் விலை இன்று (27) வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி,  தம்புள்ளை விசேட பொருளாதார நிலையத்தில் இன்று (27) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 310 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் கோவாவின் விலை 350 ரூபாயாகவும், போஞ்சி 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன்  ஒரு கிலோகிராம் லீக்ஸ் 260 ரூபாயாகவும், தக்காளி 430 ரூபாயாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்நிதியான் ஆசிரமத்தால் பெரும் உதவி..!{படங்கள்}

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு 20.02.2024 செவ்வாய்க்கிழமை பல இலட்சம் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.  வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச வைத்தியசாலை கோப்பாயின் வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் சிவஞானம் சிவகணே சிவகோணேஸ்சன் என்பவரிடம் ஐந்து இலட்சத்து அறுபத்தி ஐயாயிரத்து அறுநூறு ரூபாய் பெறுமதியான மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டன. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகலதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன்  நேரடியாக சென்று குறித்த மருத்துவ பொருட்களை கையளித்தார்.

திருமலையில் பெரும் சோகம்-இருவர் பலி..!

திருகோணமலை – கிண்ணியா, மகாவலி ஆற்று பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீன்பிடிப்பதற்காக இவர்கள் பயன்படுத்திய படகு மகாவலி ஆற்று பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் பெரும் சோகம்-இருவர் பலி..!

யானைக்கு வைக்கப்பட்ட சட்டவிரோத மின் வேலியில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல ஈச்சயடி பிரதேசத்தில் உள்ள பண்ணையொன்றிலே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த பண்ணை தேவநாயகம் செந்தூரன் என்பவரால் நடத்தப்பட்டு வந்ததாகவும், பண்ணையில் அனுமதியின்றி மின்கம்பிகள் பதித்ததால் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொது மக்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இவ்விபத்தில் கிரான், புலி பாய்ந்த கல் பிரதேசத்தை சேர்ந்த ஆறுமுகம் யோகநாதன் என்னும் […]

மலையகத்தில் பெரும் சோகம்-ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!{படங்கள்}

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை மேல் கொத்மலை நீர் தேக்கத்திற்கு நீரேந்தி செல்லும் அகரகந்தை ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர் . இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண் லிந்துலை அகரகந்த பகுதியைச் சேர்ந்த பழனிவேல் செல்வகுமாரி (வயது 45 வயதுடைவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நாகசேணையிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி பேருந்தில் பயணித்த பயணிகள் ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த லிந்துலை […]

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்றிரவு கைது: கொழும்பில் பெரும் பரபரப்பு

சிறிலங்காவின் முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்றிரவு (சற்றுமுன்) கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...