பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றைய தினம் (16/03/2024) பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில் இன்றைய தினம் (17/03/2024) இடம்பெற்ற பெண்களிற்கான 10000M ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீராங்கனை பவிதா அவர்கள் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டார்.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் இருந்தும் போட்டியிட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறித்த […]
59 வயது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞர் ஒருவர் நேற்று (6) களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 20 வயதுடைய களுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவராவார். இவர் கடந்த 4 ஆம் திகதி தனது தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட தாய் சுகயீனமடைந்து ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியதுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். விசாரணையில் […]
தான்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற போது இளைஞர்கள் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. காலி கொடுகொட பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய ஒருவரும் காலி மகுலுவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற 7 வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கள் அனைத்தும் நேற்று (04) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். களவாஞ்சிகுடி – குருமன்வெளி வீதியில் எருவில் காயல் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதேவேளை, எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாலியால […]
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டு தெற்கு, பகுதியில் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இச்சம்பவத்தில் வட்டு தெற்கு நாவலடி வீதி என்ற முகவரியில் வசித்து வந்த செல்வரதி விதிதரன் (வயது 59) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தில் பி.ப 5.00 மணிக்கும் பி.ப 6.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் 2016ஆம் ஆண்டு ஏற்கனவே ஒரு […]
முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் கத்தி குத்திற்கு இலக்கான இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (24)அதிகாலை இடம்பெற்றுள்ளது. வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார். 27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இ;வாறு உயிரிழந்துள்ளார் இவரது உடம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் இளைஞர் ஒருவர் , தமது தந்தையின் விந்தணுவைப் பயன்படுத்தி தன் மனைவிமூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’ என்று வழக்கு தொடுத்து நிலையில் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. தற்போதைய இளம் தலைமுறையினரிடையே குழந்தைகள் பிறப்பு விகிதம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. மாறிவரும் வாழ்வியல் சூழல்கள், உணவு முறைகள், பரவும் நோய்கள், சத்துக்குறைபாடு, உடல்பருமன், சுற்றுச்சூழல், பணி அமைவிடம், மனஅழுத்தம் எனப் பல காரணங்கள் […]
மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]
யாழ்ப்பாணத்தை சேர்ந்த தேவநாயகம் தேவானந்த் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முனைவர் (Ph.D )பட்டம் பெற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளராகவும், செயல் திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) இயக்கத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநராகவும் இருக்கிறார்.
மொனராகலை புத்தல பகுதியில் பதின்ம வயதில் சிறுமி ஒருவர் , மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (10) சிசுவொன்றை பிரசவித்துள்ளார்.
குழந்தை பெற்ற சிறுமிக்கு 16 வயதென்பது விசாரணைகளின் கண்டறியப்பட்டது.
குறித்த சிறுமி, அப்பிரதேசத்தில் உள்ள...
குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட பால் சுரக்கவில்லை என மன விரக்தியில் 7 வருடம் தவமிருந்து பெற்ற 20 நாள் குழந்தை தவிக்கவிட்டு தாய் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியை சேர்ந்த...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...