ஐந்து மாதங்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும், தமது கால்நடைகளுக்கும், சிங்கள பெரும்பான்மையின விவசாயிகளால் இழைக்கப்படும் அட்டூழியங்களும், அநியாயங்களும் அதிகரித்துள்ளதாக கிழக்கு மாகாணத்தின் தமிழ் பாற்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையின சிங்கள விவசாயிகள் தமது கால்நடைகளை தொடர்ச்சியாக துன்புறுத்தி வருவதோடு கொலை செய்வதாக, தொடர்ச்சியாக 160 நாட்களைக் கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, மயிலத்தமடு, மாதவனை தமிழ் பால் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர். “அதிகூடிய மின்சாரத்தைக் கொடுத்து குறைமாதத்தில் கன்றை ஈன்றுள்ளது. குறை மாதத்தில் பிறந்த கன்றால் எழும்பிகூட நிற்க […]
மத்திய வங்கியின் பெட்டகத்திலிருந்து ஐம்பது இலட்சம் ரூபா காணாமல்போனமை தொடர்பில் விசாரணை செய்யும் இரகசிய பொலிஸ் புலனாய்வுக்குழுக்கள் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், காணாமல்போன பணம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து இந்த பணம் காணாமல்போய் பல மாதங்கள் ஆகிய நிலையில் எந்தவொரு தகவலையும் கண்டறிய முடியவில்லை என கூறப்படுகின்றது. நவீன தொழில்நுட்ப பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ள […]
விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர். இதன்போதே வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் […]
பேலியகொட புதிய மெனிங் வர்த்தக சந்தையில் மரக்கறிகளின் விலைகள் வார நாட்களை விட இன்று சனிக்கிழமை (17) குறைவடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கரட் 500 ரூபாய், ஒரு கிலோ பீன்ஸ் 550 ரூபாய், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாய், ஒரு கிலோ கத்திரிக்காய் 200 ரூபாய், ஒரு கிலோ தக்காளி மற்றும் குடை மிளகாய் தலா 800 ரூபாய் என விலைகள் பதிவாகியுள்ளன. அத்தோடு, ஏனைய மரக்கறி வகைகளின் விலைகளும் இன்று குறைந்துள்ளன.
நாட்டில் கடந்த சில மாதங்களாக பன்மடங்கு அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகள் விலைகள் மீண்டும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் 2,500 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை தற்பொழுது வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், நேற்று (14) ஒரு கிலோகிராம் கெரட்டின் விலை 600 ரூபாயாக பதிவாகியுள்ளது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும், ஒரு கிலோகிராம் லீக்ஸின் விலை 350 ரூபாயாகவும், கோவா மற்றும் பீட்ரூட் ஆகியவற்றின் விலை 400 ரூபாவாகவும் விற்பனை […]
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன மைக்ரோ ரக கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர் . ருவான்வெல்ல, கொட்டியாகும்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேலும் தெரிவித்தனர். இவரிடமிருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மதுரங்குளி , முக்குதொடுவாவ பிரதேசத்தில் மின்சாரத்தை துண்டிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் இருவர் மீது மணல் வியாபாரி உள்ளிட்ட சிலர் தாக்கியதால் , தாக்குதலுக்கு உள்ளானோர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மதுரங்குளி...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...