நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நுவரெலியா பிரதேச சபைக்கு முன்பாக லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் மோட்டார் சைக்கிள் சாரதி மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் லொறி சாரதியை கைது செய்துள்ளதாகவும் […]
மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை பூஜா நகரைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி இன்று (06) பதுளை சட்ட வைத்தியரிடம் ஆஜர்படுத்தப்படவுள்ளார். […]
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு 12 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து நுவரெலியா மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மாலை தீர்ப்பளித்துள்ளது. நோட்டன்பிரிஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளவட்டன் பகுதியைச் சேர்ந்த இராஜரட்ணம் கேதீஸ்வரன் (வயது 37) என்பவருக்கு இந்த கடூழிய சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய இத் தண்டனையை வழங்கியுள்ளார். கடந்த 2010 ஆண்டு ஜனவரி மாத காலப்பகுதியில் கிளவட்டன் பகுதி பாடசாலை […]
நோர்வூட் பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று(04) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் நேற்று(03) மாலை முதல் காணாமல் போயிருந்தார். இது தொடர்பில் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இதற்கமைய காணமல் போன நபரை தேடி தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறானதொரு நிலையில், குறித்த தோட்டப் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகிலிருந்து குறித்த […]
தலவாக்கலை மேல் கொத்மலா நீர்த்தேக்கத்தில் (29) மாலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை புகையிரதசாலையில் உள்ள இரண்டு பாலங்களுக்கும் நீர்த்தேக்கத்தின் குறுக்கே நெடுஞ்சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் மிதந்த இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். நுவரெலியா நீதவான் வந்து ஸ்தல பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை […]
வலப்பனை – மத்துரட்ட பொலிஸ் பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை மூன்று முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நபருக்கு நுவரெலியா மேல் நீதி மன்றம் 07 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பினை நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் விராஜ் வீரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை (27) செவ்வாய்க்கிழமை மாலை வழங்கினார். HCR/05/2017 இலக்கம் கொண்ட இந்த வழக்கு 2017 ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களாக நுவரெலியா மேல் […]
ஹட்டன் மற்றும் கொட்டலை பகுதியில் பொது மக்கள் குடிநீர் பெற்றுக்கொள்ளும் வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் காட்டுப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதுடன் நீர் ஊற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்மூர் தோட்ட பகுதிக்கு குடிநீர் பெற்றுக்கொள்ளும் ஹட்டன் கொழும்பு பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள நீர்காப்பு காட்டுப்பகுதிக்கு இன்று (27) திகதி வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் எரிந்து […]
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் கிடப்பதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமாரவுக்கு கிடைக்க பெற்ற தொலைபேசி தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு பொலிசார் சென்று உள்ளனர். அங்கு சென்று பார்த்த போது அதே தோட்டத்தைச் சேர்ந்த 40 வயது உடைய இரண்டு குழந்தைகளின் தந்தையான குமாரவேல் சுப்பிரமணியம் என அடையாளம் காணபட்டு உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய […]
மலையகத்தில் காணாமல் போன இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
மலையகத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை ஸ்ரஸ்பி தோட்ட குமரி பிரிவில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம்...
எரிசக்தி நெருக்கடியை அடுத்து, உள்நாட்டு மற்றும் குடிசைத் தொழில்களில் நிலையான ஆற்றல் பயன்பாடு மற்றும் சூரிய சக்தி அமைப்புகள் மற்றும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை மாற்று எரிசக்தி ஆதாரங்களாகப் பயன்படுத்துவது பற்றிய பயிற்சித் திட்டம். கொத்மலை பிரதேச செயலகத்தில் கடந்த (22) நடைபெற்றது. நுவரெலியா மாவட்ட செயலாளர் திரு.நந்தன கலபட அவர்களின் வழிகாட்டலின் பேரில் மாவட்ட அபிவிருத்தி அலகமும் கொத்மலை பிரதேச செயலகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. நுவரெலியா மாவட்ட விதாதா வள உத்தியோகத்தர் திரு.ரசிக […]
கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிரிமிட்டி 476/A கிராம சேவகர் பிரிவினர் ஒன்றிணைந்து நானுஓயா டெஸ்போட் ஸ்ரீ முத்துமாரி ஆலயத்திற்கு முன்பாக இன்று (25) காலை 10 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர் இப்பகுதியில் கடமையாற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர் ஊழல் செய்வதாகவும், நேர்மையாக செயற்படவில்லை என்றும் குறிப்பாக ஒரு சிலருக்கு மாத்திரம் அனைத்து சலுகைகளும் வழங்குவதாகவும் , […]
கம்பளை – கண்டி பிரதான வீதியில் கெலிஒயா பகுதியில் பஸ்ஸும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது, குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, பேராதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஒயா பெற்றோல் நிரப்பு நிலையத்திதுக்கு முன்பாகவுள்ள வளைவில் இன்று இந்த விபத்து ஏற்பட்டுள்ளது, அனுராபுரத்தில் இருந்து ஹட்டன் – சிரிபாதமலைக்கு யாத்திரிகர்களை ஏற்றி வந்த பஸ்ஸும், புஸல்லாவைப் பகுதியில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த வானுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. வானின் சாரதி நித்திரைக் கலக்கத்தில் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...