வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீவரசித்தி விநாயகருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுடாக வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் மாசி மகத் தீர்த்த உற்சவம் இன்று (24) காலை 7.00 மணியளவில் இடம்பெற்றது. கடந்த 14 ம் திகதி ஆரம்பமான லட்சார்ச்சனையானது தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் மாசி மகத் தீர்த்தத்துடன் நிறைவுற்றது. இந்த உற்சவத்தில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளின் அருளினை பெற்றுச் சென்றனர்.
வரலாற்று சிறப்புமிக்க மாசி மக இலச்சார்ச்சனை உற்சவம் இன்று தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் பக்திபூர்வமாக இடம்பெற்றன . கருவறையில் அருள்பாலித்து விளங்கும் தெல்லிப்பளை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கும் எனைய பாரிவார தெய்வங்களுக்கும் விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றதுடன் வசந்தமண்டபத்தில் அருள்பாலித்து விளங்கும் முத்துமாரி யம்மனுக்கு மகா இலச்சார்ச்சனை உற்சவம் இடம்பெற்றது. இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்த அடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...