பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் இசுரு மதுஷான் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த 23ஆம் திகதி நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளையில், மகாவலி கங்கையின் கல்பொத்தவல என்ற இடத்தில் நீராடச் சென்றுள்ளார். இதன்போது மாணவன் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பிரதேசவாசிகள் மாணவனை கரைக்கு கொண்டு வந்து நாவலப்பிட்டி வைத்தியசாலையில் […]
கண்டி தெல்தெனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் தகவல் தொழில்நுட்ப பாடங்களை கற்பிப்பதற்காக பாடசாலையில் இருந்த மடிக்கணினியில் பாலியல் மற்றும் நிர்வாண காட்சிகள் அடங்கிய புகைப்படங்களை 12 வயது மாணவனிடம் காட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 07ஆம் மற்றும் 09ஆம் திகதிகளில் பாடசாலை நேரத்தின் போது குறித்த ஆசிரியர் தன்னை தகவல் தொழில்நுட்ப அறைக்கு அழைத்துச் சென்று நிர்வாண புகைப்படங்களைக் காண்பித்ததாக மாணவர் தனது பெற்றோருடன் வந்து தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு […]
போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் (07) சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர் வட்டுக்கோட்டை பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடளித்து விட்டு வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதன்போது குறித்த நபர் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியது. இந்நிலையில் நேற்று குறித்த மாணவனை கைது செய்த […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...