யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்ப்பாட்டில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது. 18.03.2024 இன்று பிறந்த தினத்தை கொண்டாடும் மயிலிட்டியைச் சேர்ந்த சகோதரி இன்பராசா அஐந்தா தம்பதிகளின் புதல்வி இ.றொவேனா அவர்களின் நிதிப்பங்களிப்பில் கல்வி கற்கின்ற 2மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது. யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் இன்று (18) பருத்தித்துறையில் அமைந்துள்ள ஊடக இல்ல அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய சிவராத்திரி மட பரிபாலன சபையினரால் நடாத்தப்பட்ட பன்னிசை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பரிசளிப்பு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (8) காலை திருக்கேதீஸ்வரம் சிவராத்திரி மடத்தில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் கலந்து கொண்டார். குறித்த போட்டியில் வட மாகாணத்தில் 5 மாவட்டங்களில் இருந்தும் போட்டியிட்ட போட்டியாளர்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். குறித்த […]
தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில், திங்கட்கிழமை (04) கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற அகில இலங்கை ரீதியான (U20) Division II க்கான கால்ப்பத்தாட்ட இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியினை 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு எமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தி/கிண்/ […]
இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும். இதற்கிடையில், […]
கொழும்பு – நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்கள் வெயிலில் மண்டியிடும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. பாடசாலை ஆசிரியை ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே மாணவர்கள் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . மாணவர்கள் மண்டியிடும் இடத்தில் ஆசிரியரும் நிற்பதும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்துமாறு கல்வி அதிகாரிகளிடம் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் […]
கொழும்பு - நாரஹேன்பிட்ட பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் உள்ள மாணவர்கள் வெயிலில் மண்டியிடும் காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.
பாடசாலை ஆசிரியை ஒருவரின் கட்டளைக்கு இணங்கவே மாணவர்கள் இவ்வாறு தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது...
பாடசாலை மாணவர்களின் பைகளின் எடையைக் குறைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பாடசாலை புத்தகப் பைகளின் எடையால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். அதாவது மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதிக வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (29) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய […]
அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் […]
மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!
அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி புலமைப்பரிசில் 2024/2025” திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மொத்தமாக இலங்கையில் உள்ள 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய வகையில், தரம் 01 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் ஒரு இலட்சம் (100,000) மாணவர்களுக்கு, வருடாந்தம் இந்த நிதியுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்த முழுமையான திட்டத்திற்கும் 3600 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி […]
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தோற்றிய மாணவர்களுக்கும் அதே வகையான பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...