Tag: மாணவர்களுக்கு

HomeTagsமாணவர்களுக்கு

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!

ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில்  அதிகளவான சிறுவர்கள் ஊட்டச் சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அண்மையில் வலியுறுத்தியிருந்த நிலையிலேயே அரசினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய தரம் 1 முதல் 5 வரை கல்வி பயிலும் 17 இலட்சம் மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடையே வாக்குவாதம்-17 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 17 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயிற்சி ஒன்றிற்காக ரந்தெம்பே பிரதேசத்தில் உள்ள தேசிய பயிற்சி மையத்திற்கு கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இருந்து பாடசாலை மாணவர்கள் சென்றுள்ளனர்.. இதன்போது மாணவர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

யாழில் இரு மாணவர்களுக்கு காத்திருந்த பயங்கரம்..!

யாழ்.பருத்தித்துறை பகுதியில் வீதியில் நேற்று  (20) மாலை மாணவர்கள் இருவர் மீது, வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு மாணவர்களும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாள் வெட்டு தாக்குதலுக்குக் காரணம் தெரியாத நிலையில், பருத்தித்துறை பொலிஸார் மாணவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெற்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் பெருமகிழ்ச்சி தகவல்..!,

தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் அதிகரிப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கல்வியற் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, 10 ஆயிரம் ரூபா கடன் பெறுவதற்கான யோசனை ஒன்று ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும் அதற்கு மாணவர்கள் விருப்பம் தெரிவித்திருக்கவில்லை. இந்நிலையில், அவர்களுக்கான உணவுக்கு […]

பாடசாலை விளையாட்டு போட்டியில் 76 மாணவர்களுக்கு நேர்ந்த கதி..!

பசறை பொது மைதானத்தில் இன்று (20) இடம்பெற்ற இல்லங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியின் போது குளவி கொட்டுக்கு பலர் இலக்காகியுள்ளனர். குளவி கொட்டுக்கு இலக்கான 76 மாணவர்கள் பசறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி சானக கங்கந்த தெரிவித்தார். இந்நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 50 மாணவர்கள் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் மேலும் 26 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். இல்லங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்ற […]

மாணவர்களுக்கு வெற்று வினாத்தாள்-நடந்த கூத்து..!

வடமத்திய மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரீட்சைத் தாளில் வினாக்கள் இடம்பெறாமையினால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தமிழ் மொழிமூல கணித பாட வினாத்தாளில் காணப்பட்ட இவ்வாறான தவறுக்கு மாகாண கல்விப் பணிப்பாளரின் அலட்சியமே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புலமை பரிசில் பரீட்சை சித்தியடைந்த மாணவர்களுக்கு சற்று முன் வெளியான அறிவிப்பு..!

2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில்,   2024 ஆம் ஆண்டு தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக மூன்று பாடசாலைக்காக மேன்முறையீடு […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...