Tag: மாயம்

HomeTagsமாயம்

3 மீனவர்களுடன் படகு மாயம்..!

கற்பிட்டியில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு ஒன்று மீண்டும் கரைக்கு திரும்பவில்லை என அப்படகின் உரிமையாளர் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த படகில் ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்த 21, 37 மற்றும் 38 வயதுடைய மூன்று மீனவர்கள் பயணித்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் பகுதியில் திடீரென தோன்றிய புத்தர் மக்களின் எதிர்பினால் மாயம்..!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் குறித்த சிலை அங்கிருந்து தற்போது அகற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் குறித்த புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அப்பகுதி கடற்படையினரால் புத்தர் சிலை வைக்கப்பட்டு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகித்த நிலையில்,புத்தர் சிலையை அடுத்து விகாரை தோற்றம் பெறலாம் என அச்சப்பட்டனர். இது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பேசுபொருளான […]

தமிழர் பகுதியில் சிறுவன் மாயம்..!

சிறுவனைக் காணவில்லை பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள் கிண்ணியாவைச் சேர்ந்த 14வயதுடைய யூசுப் என்கிற சிறுவனை (03/03/2024) காலை 7:30 மணியிலிருந்து காணவில்லை. இவர் சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள்: 0756887878 /0755278409 மேற்படி இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும்.

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் மாயம்..!

ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்ற 80 வயது மூதாட்டி ஒருவர் காணாமல் போயுள்ளதாக மெல்சிரிபுர பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. மெல்சிரிபுர பிரதேசத்தை சேர்ந்த 83 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு காணாமல்போயுள்ளார். இவர் கடந்த 23 ஆம் திகதி மெல்சிரிபுர பிரதேசத்திலிருந்து 53 பேர் கொண்ட யாத்திரை செல்லும் குழுவுடன் ஹட்டன் வழியாக சிவனொளி பாதமலைக்கு சென்றுள்ளார். இந்த மூதாட்டி பக்தர்கள் குழுவுடன் சிவனொளி பாதமலையின் உச்சி வரை பயணித்துள்ள நிலையில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் […]

மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்..!

மீன் பிடிப்பதற்காக சக மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ரசிக டிலான் என்ற நபராவார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) இரவு 7.55 மணியளவில் பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் மீன் பிடிப்பதற்காக மீன்பிடி படகில் 6 மீனவர்களுடன் சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த படகில் இருந்த ஏனைய 4 மீனவர்களும் மீன்பிடி படகு செலுத்தியவரும் காணாமல் போன […]

மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயம்..!

மீன் பிடிக்க சக மீனவர்களுடன் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல் போனவர் பலப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த ரசிக டிலான் என்ற நபராவார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை...

தமிழர் பகுதியில் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மாயம் – தேடுதல் நடவடிக்கை இருளால் இடைநிறுத்தம்..!

மாளிகைக்காடு- சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நிந்தவூர் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். மாளிகைக்காடு- சாய்ந்தமருது எல்லை வீதியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை மாணவர்களான 13-15 வயதுக்குட்பட்ட 08 மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையை முடித்துக் கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர்- ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது மாலை 04.20 மணி அளவில் அதில் இருவரை கடலலை […]

15 வயது சிறுமி மாயம்!! வீடியோ வாக்குமுலம் வழங்கிய 27 வயதான காதலன்

அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் திவுல்வெவ பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனால் கடத்தப்பட்ட சிறுமி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றனர். சிறுமி நேற்று முன்தினம் அதிகாலை 1.00 மணியளவில் தனது வீட்டில் இருந்த போது கடத்தப்பட்டுள்ளதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும் சிறுமியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் திவுல்வெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நேற்று கடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்

புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயம்! குடும்பத்தினரால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் அறிவிப்பு

வவுனியா - இராசேந்திரங்குளம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் காணாமல்போன சிறுமியின் சடலத்தை மீள ஒப்படைத்தால் 20 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என சிறுமியின் பாட்டி குணரட்னம் ரோகினி தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் – கடிதம் எழுதிவிட்டு களுவாஞ்சிக்குடியில் 15 வயது சிறுமி மாயம்

என்னை பார்க்க கூடிய சிங்கள வீடு ஒன்றுக்கு செல்கிறேன் என கடிதம் எழுதிவிட்டு மட்டு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மகளூரில் வீட்டில் இருந்த ரமேஸ்குமார் கிரிஸ்டிகா என்ற 15 வயது சிறுமி ஒருவர்...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...