நாட்டின் சில பிரதேசங்களில் பிரதானமாக வரட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை […]
பாடசாலைகளில் தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) அறிமுகம் செய்யப்பட உள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். இதற்கான முன்னோடி திட்டம் மார்ச் 19 முதல் 20 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த பணிக்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த ஆண்டில் இது நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில், நாட்டில் […]
வெளிமாகாணங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட தபால் நிலையங்களில் இரவு வேளைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான தண்டப்பணம் செலுத்தும் வசதியை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார். அதன்படி, மேல்மாகாணத்திலுள்ள 13 தபால் நிலையங்களில் அபராதம் செலுத்தும் வசதிகள் இரவு வேளைகளில் இயங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் முன்னோடித் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கமைவாக ஆசிரியர்களுக்கான பயிற்சியும் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் என்றார். காலியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை MEGA CITY திட்டத்தின்கீழ் பஸ்தரிப்பு நிலையம், புகையிரத நிலையம் என்பன கன்னியா பகுதியை அண்மித்து கொண்டுவரப்படவுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது. திருகோணமலையின் MEGA CITY திட்டத்தின்கீழ் பல்வேறுவகையான அபிவிருத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன் திட்டங்கள் சிறுக சிறுக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. MEGA CITY திட்டத்தின் முழுமையான விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்…
எரிபொருள் விலை அதிகரிப்பு, போக்குவரத்து கட்டண அதிகரிப்பு சாத்தியம், பாடசாலை போக்குவரத்து கட்டண உயர்வு, ரயில் பொதிகள் சேவை கட்டணம் அதிகரிப்பு போன்ற பல காரணிகள் மாதத்தின் முதல் நாளான இன்று இலங்கையர்களுக்கு...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...