Tag: மின்

HomeTagsமின்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம் தொடர்பில் மக்களின் கோரிக்கை-அபிப்பிராயங்கள்..!{படங்கள்}

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைக்கான மக்களின் அபிப்பிராயங்கள் மற்றும் கோரிக்கைகள் மன்னார் பிரதேசச் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை(6) மதியம் கையளிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் கடந்த மாதம் முன் வைக்கப்பட்ட 250 மெகா வோல்ட் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தின் 2 ஆம் கட்ட காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் இறுதி சுற்றறிக்கை இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளது. -மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் […]

சற்று முன் குறைந்த மின் கட்டணம்-மகிழ்ச்சியில் மக்கள்..!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்ணான்டோ இதனை தெரிவித்தார். அதன்படி, 30 அலகுகளுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு தற்போது அறவிடப்படும் 12 ரூபா, 8 ரூபாவாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, 33.3 சதவீதத்தால் அது குறைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல், […]

ரயிலில் உள்ள மின் விசிறிகளை திருட முயன்ற ரயில்வே ஊழியருக்கு நேர்ந்த கதி..!

மாளிகாவத்தை ரயில்வே  தரிப்பு  பகுதியில்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருட முயன்ற ரயில்வே திணைக்கள ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் குடாபலுகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவராவார். ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகளால் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே சந்தேக நபர், திருடிய ரயில் பெட்டிகளின் மின் விசிறிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல காலமாக ரயில் பெட்டிகளின் மின்விசிறிகளை திருடி வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக […]

20 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்கலாம்..!

மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின்  வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை […]

மின் கட்டண குறைப்பு தொடர்பில் சற்று முன் அமைச்சரின் மகிழ்ச்சி தகவல்..!

கடந்த அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட மின்சார கட்டணத்தை புதிய திருத்தத்தின் ஊடாக முழுமையாக நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்  இன்றைய தினம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான யோசனையை மின்சார சபை, நாளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, வீடுகள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் என்ற வகையில் அக்டோபர் மாதம் உயர்த்தப்பட்ட 18 சதவீத கட்டண உயர்வு இங்கு முழுமையாக குறைக்கப்படும். […]

இலங்கையில் மீண்டும் மின் வெட்டா-சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

இலங்கையில் மின் விநியோகம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார். இலங்கையில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி குறைந்துள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடும் உஷ்ணம் காரணமாக மின்சார தேவை சடுதியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அனல் மின் உற்பத்தி 63 சத வீதம் வரை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை நிர்வகிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இந்நிலையில் […]

மின் ஒழுக்கால் எரிந்து நாசமான தும்புத் தொழிற்சாலை.!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோணாவில் பகுதியில் இன்றைய தினம் 07.02.2024மின் ஒழுக்கு ஏற்பட்டதன் காரணமாக 35 லட்சத்துக்கு மேற்பட்ட தும்பு மற்றும் மின் உபகரணங்கள் அனைத்தும் முற்று முழுதாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும் கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினர், தீயணைப்பு வாகனம் பழுதடைந்த நிலையில் இருந்தமையால் தண்ணீர்பெளசர் மூலம்  அயலவர்களின் உதவியோடு  உடனடியாக தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  இருப்பினும் தமது வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் நிர்க்கதியாக நிற்பதாகவ தொழிற்சாலை உரிமையாளர் தெரிவித்துள்ளார். மின் இணைப்பு […]

கடமை நேரத்தில் தூங்கியவர் அட்டகாசம்! மின் விளக்கை ஒளிரவிட்டதால் 3 பேர் மீது தாக்குதல்

கண்டி தேசிய வைத்தியசாலையில் மின்விளக்கை ஏற்றியதால் தூக்கம் கலைத்ததாக குறிப்பிட்டு, மூன்று சிற்றூழியர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிற்றூழியர் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவின் அறையொன்றில் கடமை நேரத்தின் போது உறங்கிக் கொண்டிருந்த இந்த சிற்றூழியர், மின்விளக்கு ஒளிரவிடப்பட்டதால் தூக்கம் கலைந்ததாக குறிப்பிட்ட மூன்று சிற்றூழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உத்தரவின் பிரகாரம், அவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அவரது தாக்குதலால் காயமடைந்த மூன்று சிற்றூழியர்கள் 17ஆம் இலக்க விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலை மேற்கொண்டதாக கூறப்படும் சிற்றூழியரை வைத்தியசாலை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கண்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று முன்தினம் (01) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மின் இணைப்பை துண்டிக்க முற்பட்ட ஊழியரை நையப்புடைக்கும் காட்சிகள்!! வீடியோ

தலாவ ஜெயகங்கை பிரதேசத்தில் வீடொன்றில் மின் இணைப்பை துண்டிக்கச் சென்ற இரு தொழிலாளியை நாய்க் கூடத்தில் இருந்த பலகையால் குறித்த வீட்டின் உரிமையாளரின் மகன் தாக்கியுள்ளார். இது தொடர்பிலான முறைப்பாடொன்றும் தற்போது தலாவ பொலிஸாருக்கு...

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...