கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் மருதங்கேணி பொலிசாரால் 11.03.2024 திங்கள் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 2Kg கேரள கஞ்சாவுடன் குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபர் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மருதங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்
வாதுவை – பொஹத்தரமுல்ல கடற்கரை பகுதியில் போதைப்பொருளுடன் 17 வயது சிறுமியும் அவரது 30 வயதான காதலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாதுவை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுமி மற்றும் 30 வயது இளைஞராவர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் சந்தேக நபர்களிடமிருந்து 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரான சிறுமி ஹொரணை பிரதேசத்தில் மேலதிக வகுப்பொன்றில் கலந்து கொண்டு […]
சட்டவிரோத கஞ்சா கலந்த மதனமோதகம் தொகை ஒன்றை விற்பனைக்காக வைத்திருந்த 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹிங்குரக்கொட நகரின் இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் இருந்து 671 மதனமோதக பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
குழந்தைகளை கையில் ஏந்தியவாறு ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு பெண்களையும் அவற்றை கொள்வனவு செய்ய சென்ற மூன்று நபர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை , எகொடஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 24 வயதுடைய இரு பெண்களும் அம்பலாங்கொடை, பலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மூன்று நபர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக […]
கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தரகர்கள் ஊடாக அதிக போதை மாத்திரைகள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் வைத்தியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 160,000 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களை மற்றுமொரு நபருக்கு வழங்கிய போதே வைத்தியர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெலிஓயா பிரதேசத்தை சேர்ந்த இந்த வைத்தியர், வைத்தியசாலை சேவைக்கு மேலதிகமாக பல பிரதேசங்களில் வைத்திய நிலையங்களை நடத்தி இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைத்தியர் இரவு நேரத்தில் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...