யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம்புரண்டு சரிந்து விழுந்துள்ளன. விபத்து காரணமாக எரிபொருள் தாங்கியில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் கசிந்து காணப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வள்ளிபுனம் பகுதியிலுள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மீது பயணித்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் தொடராக மோதிய விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (21.03.2024) பிற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து உடையார்கட்டு பகுதி நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வள்ளிபுனம் பாடசாலைக்கு முன்பாக திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முந்தி செல்ல முற்பட்ட […]
மாத்தளை – வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய மேல் மலகஸ்வெவ புளியங்குளத்தை சேர்ந்த ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். மதவாச்சியிலிருந்து அம்பாறை பிரதேசத்திற்கு மரக்கன்றுகளை வெட்டுவதற்காக பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த இரண்டு உழவு இயந்திரங்களில் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் மற்றைய உழவு […]
பெக்ஹோ (Backhoe) மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திஸ்ஸ கதிர்காமம் பிரதான வீதியில் கண்தவிஹாரைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே இரு சாரதிகளுக்கும் இடையில் தனிப்பட்ட தகராறு காணப்பட்டு, விபத்து ஏற்படுத்தப்பட்டதாகவும் இதன்போது பெக்ஹோ வீதியில் கவிழ்ந்ததாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பில் ரயில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு, கோட்டையிலிருந்து நேற்று மாலை 3.05 மணிக்கு மட்டக்களப்பு நோக்கிப் புறப்பட்ட புலதுசி கடுகதி ரயில், இரவு...
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை-தம்பலகாமம் பகுதியில் ரயிலுடன் மோதி 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். முள்ளிப்பொத்தானை யூனிட்-07 பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய நளீம் முஹம்மது சப்ரிட் என்ற மாணவனே உயரிழந்துள்ளார். குறித்த சிறுவன், தம்பலகாமம் பகுதியிலுள்ள பாலத்துக்கு அருகில் சக நண்பர்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளார், அந்தசமயம் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதியதாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவன் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது படுகாயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்
பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பத்தர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட...
மன்னார் நானாட்டானில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த...
மாங்குளத்துக்கு அண்மையாக ஏ9 வீதியில் இரண்டு டிப்பர் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஆணும், பெண்ணும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாங்குளத்துக்கும், கனகராயன் குளத்துக்கும் இடையில் இந்த விபத்து நடந்தது.
மோட்டார் சைக்கிள்...
கிளிநொச்சி, அறிவியல்நகர் பகுதியில் இன்று நடந்த ரயில் விபத்தில் இளம் குடும்ஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்துள்ளது.
முறிகண்டியைச் சேர்ந்த 43 வயதான கேதீஸ்வரன் விஜயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளவராவார்....
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...