ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது ஜக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க குறித்த விடயத்தை தெரிவித்தார். இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார். இன்றைய கூட்டத்தில் இதுவரை காலமும் கட்சியின் ஆதரவாளர்களாக உறுப்பினர்களாக இருந்த பலரும் […]
இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாட்டு எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் ச பத்மநாபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜா சகிதம் விருந்தினர்கள் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்களின் மக்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து நந்திக் கொடி ஏற்றும் வைபவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாணவிகளின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது. வரவேற்பு உரையை […]
வெடுக்குநாறி மலை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தொல்லியற் போர்வையிலான பண்பாட்டு அழிப்பையும் சிங்கள – பௌத்தமயமாக்கத்தையும் உடன்நிறுத்துமாறும், வெடுக்குநாறிமலையில் திட்டமிட்டு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மார்ச் 19ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) நண்பகல் 12 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இந்த போராட்டத்தினை நடாத்துவதற்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது […]
அராலியில் இளைஞர் கழகம் ஒன்று முறைகேடான விதத்தில் பதிவு செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சர்ச்சை எழுந்திருந்தது. சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/160 கிராம சேவகர் பிரிவில் இளைஞர் கழக நிர்வாகத் தெரிவு கூட்டம் நடாத்தாமல் சிலர் தமது பெயர்களை எழுதி, சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தரின் செல்வாக்குடன் இளைஞர் கழகத்தினை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த கிராம சேவகர் பிரிவில் ஏற்கனவே இளைஞர் கழகத்தினை நடாத்திய இளைஞர்கள், நிர்வாக தெரிவு […]
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகத்தின் அனுசரணையில் சித்த மருத்துவ முகாம் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த மருத்துவ முகாம் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகமும், வட வட மாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த மருத்துவ முகாம் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரக உயர் அதிகாரி மனோஜ்குமார் கலந்து கொண்டார். குறித்த மருத்துவ முகாமில் பரிசோதிக்கப்பட்டு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டதுடன், […]
யாழ்ப்பாணத்தில் இன்று (15) அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகருக்கு அண்மையாக இன்று அதிகாலை 2 மணியளவில் முச்சக்கர வண்டியில் பயணித்த 5 பேர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25 வயதான முச்சக்கர வண்டி சாரதி, கொக்குவிலை சேர்ந்த 25 வயதான இளைஞன், யாழ்ப்பாண நகரத்தை சேர்ந்த 20 வயதான இளைஞன், குருநகரை சேர்ந்த 26 […]
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயமானது 2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பிக்கும் முகமாக “பெண்களுக்கான ஆதரவின் மூலம் பொருளாதார மாற்றம்”: “நெருக்கடிக்கு ஒரு பதிலளிப்பு.’ (“Economic Transformation through Support for Women”: ‘A Response to the Crisis.) இன்று யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சமகால பொருளாதார நெருக்கடிக்குள் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் கருத்துபரிமாறல்கள் இடம்பெற்றன. குறிப்பாக பெண் தொழிற்படையினர் (Labour Force), புலம்பெயர் தொழிலாளர்களாகவுள்ள பெண்கள் (Migrant Workers), ஆடை தொழிற்சாலைகளில் கடமையாற்றும் பெண்கள் (Garnment Sectors) மற்றும் முறைசாரா Informal Sector) முன்னிலைப்படுத்தி துறைசார் கருத்துக்கள் இடம்பெற்றன.
யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் மஜகர் கையளித்ததுடன் கண்டன போராட்டத்தையும் முன்னெடுத்தனர். குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய ரோலர் படகுகளினால் தொடர்ச்சியாக எமது வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. இந்திய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துமாறு இலங்கை மற்றும் இந்தியா அரச உயர் மட்டம் வரை மஜகர்களை கையளித்தது மட்டுமல்லாது கண்டன போராட்டங்களையும் மேற்கொண்டோம். ஆனால் எமது கோரிக்கை தொடர்பில் இந்திய அரச உயர் மட்டம் இதுவரை சாதகமான பதில் எதுவும் வழங்கவில்லை. ஆகவே எமது கோரிக்கை அடங்கிய மஜகரை நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்திடம் வழங்கியுள்ளோம். எமது மஜகருக்கான பதிலை இம் மாதம் 25 ஆம் திதிக்கு முன்னர் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள […]
இலங்கை விமானப் படையின் 73வது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கல்விக் கண்காட்சியும், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்வுகளும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் இன்றையதினம் குறித்த கண்காட்சியை பார்வையிட்ட மாணவி ஒருவர் தனக்கு விமானி ஆக விருப்பம் உள்ளதாகவும், அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களிடம் கேட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவிக்கு தேவையான ஆலோசனைகளையும் நினைவுச் சின்னம் ஒன்றினையும் இலங்கை விமானப்படையின் தளபதி […]
மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான சாந்தன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த 28ஆம் திகதி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது சடலம் நேற்றையதினம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னமும் உடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவில்லை.
மறைந்த சாந்தன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகம் எங்கும் கறுப்புக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.
முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான...
யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் தடுப்பு பணியகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் (UNFPA) ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பாய் ஸ்மித் (Poi Smith) குறிந்த அலுவலகத்தை திறந்து வைத்தார். யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்திற்கு அருகில் இந்த அலுவலகம் அமைந்துள்ளது. இன்றைய நிகழ்வில், ஐக்கிய நாடுகளுக்கான சனத்தொகை நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி குனே அடேனி (Kune Adeni), யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், பொலிஸ் அதிகாரிகள் […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...