பருத்தித்துறை பிரதேச செயலக விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான மெய்வல்லுனர் போட்டிகள் நேற்றைய தினம் (16/03/2024) பருத்தித்துறை ஹாட்லிக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமானது. அந்தவகையில் இன்றைய தினம் (17/03/2024) இடம்பெற்ற பெண்களிற்கான 10000M ஓட்டப் போட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தை சேர்ந்த வீராங்கனை பவிதா அவர்கள் முதலாமிடத்தினை பெற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம் சாட்டி கடலுக்குள் நீராடச் சென்ற சிறுமியொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த அவந்திகா விஜயகாந்த் என்ற 11 வயது சிறுமியே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர். ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார். காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் […]
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். குறிப்பாக மன்னார் மாவட்ட போக்குவரத்து சாலை பேருந்துகளின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதுடன் தூர பிரயாணங்களின் போது பேருந்துகள் நடுவீதியில் அடிக்கடி பழுதடை வதாகவும் பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணத்திற்கு தகுதியற்ற பேருந்துகள் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர். இது தொடர்பாக […]
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களின் தலைமையில் ஐவரடங்கிய குழு இன்று (01.03.2024) நியமிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் உரிமையாளர்களின் கோரிக்கையின் பிரகாரம் நேற்று (29.02.2024) நடைபெற்ற கூட்டத்தில், பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து உரிய […]
யாழ்ப்பாணம் புதிய பஸ் நிலையத்திலிருந்து தூர பிரதேசங்களுக்கு போக்குவரத்து சேவையை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐவரடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு...
மயங்கி விழுந்த ஆசிரியர் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி ஆசிரியரான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியரே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து சிகிச்சைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வயலின் இசை கச்சேரி இடம் பெற்றது. இதில் வயலீனை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் நந்தகுமார், தம்புரா விசயன் ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக கலந்து கொண்டு இன்னிசை விருந்தை நடாத்தியிருந்தனர்.மேலும் ஆண்மீக உரையும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலா […]
பனை, தென்னை வள சங்க முகாமையாளரின் தாக்குதலுக்கு இலக்கான சீவல் தொழிலாளி ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கரவெட்டி வடக்கை சேர்ந்த வேலன் பிரேமதாஸா (வயது -54) என்பவரே வைத்தியசாலையில் சிகிச்சை...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...