Tag: வடக்கில்

HomeTagsவடக்கில்

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் நிலையம் வலி வடக்கில் திறந்து வைப்பு!

வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் இன்று(20) திறந்து வைக்கப்பட்டது மல்லாகம் பொதுச்சந்தை வளாகத்தில்”பெறுமதி” எனும் பெயருடன் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலையத்தை யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பொ.ஸ்ரீவர்ணன் அவர்களுடன் தெல்லிப்பளை சுகாதாரவைத்திய அதிகாரி திரு.பரா நந்தகுமார் மற்றும் save a life நிறைவேற்று பணிப்பாளர் திரு .க ராகுலன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தார்கள். இவற்றுடன் பசுமை இயற்கை பசளை அறிமுக நிகழ்வும், […]

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் கையளிப்பு.

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் பார்வையிட்டு காணிகளை பொதுமக்களிடம் கையளித்தனர். ஜே – 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும், ஜே – 240 தென்மயிலை கிராம சேவையாளர் பிரிவில் 25.02 ஏக்கர் காணி 41 பேருக்கும் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உயர் பாதுகாப்பு வலயமாக பாதுகாப்பு தரப்பினரது கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் ஒரு தொகுதி காணி நிலங்கள் விடுவிக்கப்பட்டதற்கான ஆவண பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. ஜே -241 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதி எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் விடுவிக்கப்படுமென தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்தார். காணிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் பழைய வீடுகளின் கதவு, நிலை, உள்ளிட்ட பொருட்களை திருடிச் செல்லும் வாய்ப்பு காணப்படுவதால் காணிகளுக்கு உரிய பாதுகாப்பை மேற்கொண்டு தருமாறு காணிகளை பார்வையிட்ட காணி உரிமையாளர்கள் கேட்டுக் […]

வடக்கில் சூரிய மின்சக்தி திட்டம்-எரிசக்தி அமைச்சர் சொல்வதென்ன..!

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மின் உற்பத்தி அபிவிருத்தியால் அனலைத் தீவு,நெடுந்தீவு மற்றும் நயினாத்தீவு பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். வடக்கு மாகாணத்தில் சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு மாகாணத்தில் […]

வடக்கில் சுகாதார துறையினர் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ச அமைச்சருக்கு, வடக்கு ஆளுநர் எடுத்துரைப்பு..!{படங்கள்}

சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவை, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள், கொழும்பு சுவசெரிபாயவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சில் இன்று (05.03.2024) சந்தித்து கலந்துரையாடினார். வடக்கு மாகாணத்தில் சுகாதார துறைக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதால் சுகாதார துறையினர் எதிர்நோக்கியுள்ள சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுனரால், சுகாதார அமைச்சருக்கு எடுத்துக்கூறப்பட்டது. வடக்கில் இதுவரை நிரப்பப்படாத ஆளணி மற்றும் ஆளணி வெற்றிடங்களுக்கான மாற்றீடுகள் தொடர்பில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் தீர்வு பெற்றுத்தரப்படும் என […]

வடக்கில் 3 பாடசாலைகள் இலங்கையின் சிறந்த பாடசாலையாக தேர்வு..!

இலங்கையின் சிறந்த 10 பாடசாலைகளில் வடக்கில் இருந்து மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது , தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் திறைசேரியின் அங்கீகாரத்துடன் இலங்கையில் சிறந்த 10 பாடசாலைகளில் ஒன்றாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இந்த தரம் உயர்வின் மூலம் பாடசாலையின் அதிபராக வலயக்கல்விப் பணிப்பாளருக்கு சமனான எச். எல். ஈ. எஸ் தரம் ஒன்று உத்தியோகத்தர் காணப்படுவதோடு, பிரதி அதிபர்களாக மூவர் எஸ்எல்ஈஎஸ் தரம் மூன்று உத்தியோகத்தர்களும் கடமையாற்றுவார்கள். வடமாகாணத்திலேயே பிரதி அதிபர் பதவிக்கு […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...