வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்திரெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று 16.03.2023 காலை கரையொதுங்கியுள்ளது. பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் வடமராட்சியில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பு நடைபெற்றது. வடமராட்சி பிரதேசத்தில் காணப்படும் உள்ளக வீதிகள் சீரின்மை தொடர்பாக அதிகளவான முறைப்பாடுகள் கௌரவ ஆளுநரிடம் இதன்போது முன்வைக்கப்பட்டன. அத்துடன் விளையாட்டு மைதானம் சீரின்மை, வீதிகளுக்கான மின் விளக்குகள் பொருத்தப்படாமை, சனசமூக நிலையங்களின் தேவைகள் […]
வடக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஆளுநரின் சிநேகபூர்வ மக்கள் சந்திப்பின் மற்றுமொரு கட்டம் வடமராட்சியில் நடைபெற்றது. வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்...
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 26.02.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெறுவுள்ளது. வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர். உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று […]
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 26.02.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி...
வடமராட்சி யா/கெருடா இந்து தமிழ்க்கலவன் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று மதியம் 02.00 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுதாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் ஆண்டறிக்கையும்,ஆண்டு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டதோடு அதனை தொடர்ந்து அபிவிருத்திசங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவும் இடம்பெற்றது. ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தேசிய வாசிப்பு மாத பரிசளிப்பு விழா 2023 நிகழ்வு இன்று பிற்பகல் 3 மணியளவில். வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் பிரதேச சபைச் செயலாளர். கணேசன் கம்சநாதன் தலைமையில் இடம்பெற்றது. இதில் முதல் நிகழ்வாக. விருந்தினர்கள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு. மேலைதேய இசை முழங்க விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டு அங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. வரவேற்பு நடனம், வரவேற்புரை, தலைமை உரை என்பவற்றை தொடர்ந்து கருத்துரைகளை வடமராட்சி […]
யாழ்.வடமராட்சிக் கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவானது இன்றைய தினம் (17) வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் தலைவராக திரு க.சயந்தன் அவர்களும் செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு உ.நிதர்சன் அவர்களும் பொருளாளராக திரு பூ.லின்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர். அத்தோடு சம்மேளனத்தின் ஏனைய பதவிகளுக்கும் பிரதேச இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த நிகழ்வில் பிரதேசத்தின் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய கல்விக்கு கரம்கொடும்போம் என்ற செய்ற்திட்டத்தின்கீழ் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி என்பன வழங்கிவைக்கப்பட்டன. பருத்தித்துறையில் உள்ள யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தின் அலுவலகத்தில் நேற்று (16) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் மாணவி ஒருவருக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கிவைக்கப்பட்டன. மயிலிட்டி திருப்பூர் […]
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தின் சைவ கலை கலாசார பேரவையின் வாராந்த நிகழ்வு நேற்று சிறப்பாக இடம்பெற்றது. சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகன் சுவாமிகள் தலமையில் இடம் பெற்ற நிகழ்வில் வயலின் இசை கச்சேரி இடம் பெற்றது. இதில் வயலீனை ஸ்ருதிவேந்தன் அ. ஜெயராமன், மிருதங்கம் நந்தகுமார், தம்புரா விசயன் ஆகியோர் அணிசெய் கலைஞர்களாக கலந்து கொண்டு இன்னிசை விருந்தை நடாத்தியிருந்தனர்.மேலும் ஆண்மீக உரையும் இடம் பெற்றது. இந்நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலா […]
கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை ஐந்து மணியளவில் நெல்லை உலரவிடுவதற்காக பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிரே நெல் பரவிக் கொண்டிருந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காலையில் அதிக பனி மூட்டம் இருள் காரணமாக வீதியில் நெல் பரவியவரை தெரியவில்லை அதனாலேயே […]
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது.
காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசியக் கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...