Tag: வட்டுக்கோட்டை

HomeTagsவட்டுக்கோட்டை

வட்டுக்கோட்டை குடும்பஸ்தர் கொலை விவகாரம் – கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு!

வட்டுக்கோட்டை – மாவடிப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பஸ்தரான தவச்செல்வம் பவித்திரன் அவர்களது கொலைக்கு ஒரு வகையில் காரணமாக இருந்த கடற்படையினரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு மல்லாகம் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. குறித்த குடும்பஸ்தர் கடந்த 11ஆம் திகதி அவரது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவேளே பொன்னாலை கடற்படை முகாமுக்கு அண்மையில் நின்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் அவரை துரத்தினர். இதன்போது குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் கடற்படை முகாமுக்குள் புகுந்தனர். இவ்வாறு அடைக்கலம் புகுந்தவர்களை […]

வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை – கைதனவர்களுக்கு விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி […]

வட்டுக்கோட்டை சந்தியில் விபத்து – முச்சக்கர வண்டி சாரதிக்கு நேர்ந்த கதி!

இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது. இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பயணத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...