இன்று காலை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வட்டுக்கோட்டை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,இன்று காலை காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பயணிகள் தனியார் போக்குவரத்து பேருந்து வட்டுக்கோட்டை சந்தியை கடக்க முற்பட்டது. இதன்போது அராலி தெற்கு பக்கத்தில் இருந்து வந்த, வெதுப்பக பொருட்கள் விற்பனை செய்யும் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகேயுள்ள வெற்றுக் காணியினுள் இருந்த கற்களின் மேல் பாய்ந்தது. இதனால் முச்சக்கர வண்டியின் சாரதி தலையில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் பயணத்தை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்நோக்கினர். வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது பொலிஸாரின் முச்சக்கர வண்டி! இன்றையதினம் கோப்பாய் பொலிஸாரின் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பண்ணை கடலினுள் பாய்ந்தது. விசாரணைக்காக சென்ற முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இவ்வாறு கடலினுள் பாய்ந்த முச்சக்கரவண்டியானது உழவு இயந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. பொலிஸாரே இவ்வாறு அதிக வேகத்தில், ஆபத்தான விதத்தில் பயணம் செய்யும் நிலையில் பொதுமக்களை எவ்வாறு அவர்கள் நல்வழிப்படுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்களாஹத்த பகுதியில் வீட்டுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை திங்கட்கிழமை (04) ஆம் திகதி இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளது. இவ் திருட்ச்சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (05) முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. cp YS 3772 என்ற இலக்கத்தகடு இலக்கத்தைக் கொண்ட டிவிஎஸ் கறுப்பு நிற முச்சக்கர வண்டியினை உரிமையாளர் எரிபொருள் இன்றி தனது வீட்டுக்கு முன் நிறுத்தப்பட்டிருந்ததாக உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முச்சக்கர வண்டி […]
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஸ்டிக்கர் ஒட்டும் பணி தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம் நடைபெற்றது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் அப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, முச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கரிற்காக 400 ரூபாவும், மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணமாக 250 ரூபாய் கட்டணமாக அளவிடப்பட்டு இவர்களுக்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காகவும், வீதி விபத்துக்கள் மற்றும் குற்ற செயல்களை இலகுவாக இனம் காண்பதற்காகவும் […]
விசுவமடுவில் மாட்டுவண்டி சவாரியினை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி மாட்டுவண்டி சவாரி திடலில் மாட்டுவண்டி சவாரி கடந்த 18.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டிருந்ததனர். இதன்போதே வட்டக்கச்சியில் இருந்து குறித்த நிகழ்வை பார்வையிட வந்த ஒருவரின் மோட்டார் சைக்கிள் களவாடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தினையடுத்து சம்பந்தப்பட்டவரினால் புதுக்குடியிருப்பு பொலிஸில் நேற்றையதினம் (19) முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸ் […]
இன்று (27) காலை நாரம்மல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிவுல்கல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் மரணமடைந்துள்ளனர்.
நாரம்மலவிலிருந்து கிரிஉல்ல நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர்திசையில் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த...
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...