Tag: விசேட

HomeTagsவிசேட

விசேட சுற்றிவளைப்பில் 913 சந்தேகநபர்கள் கைது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்யும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட சுற்றிவளைப்பில் 883 ஆண்களும் 30 பெண்களும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 54 பேரை மேலதிக விசாரணைகளுக்காக தடுத்துவைக்க நீதிமன்ற அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 15 பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, மேல் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோய்ன், 269 கிராம் ஐஸ் மற்றும் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக 85 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்ட […]

யாழில் பொலிஸ் மா அதிபர் விசேட உரை!

பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சமுதாய பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் சமுதாய பொலிஸ் குழுக்களுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் உள்ளிட்டவர்கள் கலந்துரையாடும் நிகழ்வு இன்று(17) நடைபெற்றது. இதன்போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ள 255 கிராம […]

வடக்கு ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் விசேட கலந்துரையாடல்.

வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே (Dr.Satvanjal Pandey) உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல், காங்கேசன்துறைக்கும் தூத்துக்குடிக்குமான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் மற்றும் வடக்கில் முன்னெடுக்கக்கூடிய ஏனைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.

வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு – அமைச்சர் டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்து!

இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான உண்மைகளை கண்டறிந்து, தேசிய நல்லிணக்கத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் எதிர்காலத்தில் நடைபெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொளள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சரினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 ஆம் திகதி இரவு நேர சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய நிர்வாகத்தினரால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இரவு நேரத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட முடியாது என்று தெரிவித்த பொலிஸார், வழிபாடுகளை தடுத்து நிறுத்தியதுடன் ஆலய நிர்வாகத்தினர் எட்டுப் பேரை கைது செய்து தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு..!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான தொழிற்பயிற்சித் திட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் பிற்பகல் 02:00 மணிக்கு அந்தந்த மையங்களுக்குச் சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொள்கிறது. இத்திட்டத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் ஆங்கில மொழி, வழிகாட்டுதல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில்சார் பாடம் ஆகியவற்றை இலவசமாகப் படிக்க முடியும். இதற்கிடையில், […]

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி..!

நுவரெலியா மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்ட் தடுப்பூசியை வழங்குவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர சுகாதார பரிசோதகர் கித்சிறி ஹேரத் தெரிவித்தார்.   நுவரெலியா மாநகர சபையின் நகர சுகாதார பிரிவு கடந்த 01 ஆம் திகதி முதல் இந்த வாரம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது.   எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள வசந்த […]

நுவரெலியா மாவட்டத்திலுள்ள ஊழியர்களுக்கு விசேட தடுப்பூசி..!

நுவரெலியா மாநகரசபையின் சுகாதாரப் பிரிவினால் நுவரெலியா மாநகரசபை எல்லைக்குள் உணவு மற்றும் பானங்களைப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், கடைகள் மற்றும் நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களுக்கும் டைபாய்ட் தடுப்பூசியை வழங்குவதாக நுவரெலியா மாநகரசபையின் பிரதான மாநகர...

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2023 – தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, குறித்த விண்ணப்பம் ஏற்கனவே பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த விண்ணப்பத்தை தரம் 05 இல் கல்வி கற்ற பாடசாலை அதிபரிடம் பெற்று முறைப்படி […]

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்..!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் 2023 - தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்...

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, குறித்த அறிக்கையில் அதிக வெப்பமான வானிலை காரணமாக மாணவர்களுக்கு ஏற்படக்கூடும் நோய் நிலைமைகளும் அதற்கான முதலுதவிகள் குறித்தும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, அதிக வெப்பம் காரணமாக தசை பிடிப்பு, அதிக வேர்வை, மயக்கம் […]

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..!

மாணவர்களுக்கு சற்று முன் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு..! அதிக வெப்பமான வானிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதகமான சூழ்நிலைகளில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிபர்களுக்கு அறிவிக்குமாறு அனைத்து...

சற்று முன் ஐனாதிபதியின் விசேட உத்தரவு..!

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வௌியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...