தென்னங் கோம்பைகளை ஏற்றி வந்த “பட்டா வாகனம்” ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலை உடைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் A9 வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளார். சாவகச்சேரியிலிருந்து தென்னங்கோம்பைகளை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பட்டா வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...