Tag: விற்று

HomeTagsவிற்று

மகனின் பாதணிக்கு வழங்கப்பட்ட வவுச்சரை விற்று போதையில் நீந்திய தந்தை..!

திஸ்ஸமஹாராம பகுதியில் பாடசாலையில் பாதணிகளுக்காக வழங்கப்பட்ட வவுச்சரை விற்று தந்தை ஒருவர் மதுபானம் அருந்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பாடசாலையில் பாதணிகளுக்கு வவுச்சர் வழங்கப்பட்ட நிலையில், பாதணியின்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களை அழைத்து ஆசிரியர்கள் நடத்திய விசாரணையின் போது குறித்த விடயம் தெரியவந்துள்ளது. மேலும் பல பெற்றோர்கள் பாதணி வவுச்சரை விற்று உருளைக்கிழங்கு, பருப்பு போன்ற உணவுப் பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் கைது செய்யப்பட்ட குற்றவாளியின் போனை விற்று காசு பார்த்த பொலிசார் ..!

அம்பாறை பகுதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரினுடைய கையடக்க தொலைபேசியை விற்பனை செய்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.   சந்தேகநபரின் 58,000 ரூபாய் பெறுமதியான தொலைபேசியை குறித்த காவல்துறை உத்தியோகத்தர் 5,000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   சந்தேகநபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இலங்கையின் வெறித்தனமான காதலர்கள்-மில்லியன் கணக்கில் விற்று தீர்ந்த ரோஜாக்கள்..!

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனி ஒரு […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...