எல்லை தாண்டி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை இந்தியா – நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15பேர் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் . குறித்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட வேளை இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் நீரியல்வள திணைக்களம், […]
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் நால்வரை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தனது மனைவியுடன் காரைநகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பியவர்களை பொன்னாலை பால பகுதியில் உள்ள கடற்படையின் முகாம் முன்பாக வைத்து வன்முறை கும்பல் கடத்தி சென்றது. கணவனை ஒரு வாகனத்திலும், மனைவியை ஒரு வாகனத்திலும் கடத்திய வன்முறை கும்பல், மனைவியை சித்தங்கேணி […]
கனடாவில், ஒட்டாவாவில் 6 இலங்கையர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (14) நடைபெற்றது. பெப்ரியோ டி சொய்சா என்ற 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே தற்போது கொலைகள் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் அவர் நேற்று (14) விசாரணைகளுக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸூக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்பை அனுமதியின்றி பதிவு செய்து, அந்த தொலைபேசி உரையாடலை யூடியூபில் பதிவேற்றம் செய்து, பொது பாதுகாப்புக்கு எதிராக தவறு செய்ய தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஒருவரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின் கமகே நேற்று உத்தரவிட்டுள்ளார். தொலைபேசி உரையாடலில் பதிவை யூடியூப்பில் பதிவேற்றம் செய்து, பொது அமைதியை சீர்குலைக்கும் விதமான குற்றத்தை செய்தமை […]
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன....
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் நேற்று கைது செய்யப்பட்ட அவர் இன்று மாளிகாகந்த...
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை...
நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். நெடுந்தீவில் ஆறு பேர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று (நவம்பர் 1) சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கொலை செய்யப்பட்டவர்களது உறவினர்களும் மன்றில் பிரசன்னமாகியிருந்ததுடன் மேலதிக விசாரணைகள் எதுவுமின்றி சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்னர். கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி நெடுந்தீவில் 06 முதியவர்களை படுகொலை செய்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கொலையானவர்களின் நகைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் கொலைக்கென பயன்படுத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்கொலைகள் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்கள் முடிவுற்ற நிலையில் தொடர்ந்து […]
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...