Tag: விளையாட்டுச்

HomeTagsவிளையாட்டுச்

உணவு அருந்திய கிரிக்கட் வீரர் திடீர் உயிரிழப்பு..!

தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய ஹொய்சலா கே என்கிற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெற்று வருகிறது. இதில், தமிழ்நாடு – கர்நாடக அணிகள் மோதிய நேற்றைய ஆட்டத்தில் கர்நாடக அணி வெற்றி பெற்றது. இந்நிலையில், இந்த போட்டிக்காக கர்நாடக அணியில் விளையாடிய ஹொய்சலா கே என்கிற வீரர் மாரடைப்பால் உயிரிழந்த […]

முல்லைத்தீவு இளம் கிரிக்கெட் வீரனின் வீட்டுக்கு விஜயம் செய்த சமிந்த வாஸ்..!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவரும் இப்போது Jaffna Stallions academyயினால் நடத்தப்படும் BBK Cricket Mercantile அணியில் ஆடிவருபவருமான கவிலன் மகேந்திரனின் வீட்டுக்கு இலங்கையின் முன்னாள் வீரர் சமிந்த வாஸ் தனது மனைவியுடன் விஜயம் செய்திருக்கிறார். கவிலன் மட்டுமன்றி இப்போது இலங்கையின் பல்வேறு கழகங்களுக்காக ஆடிவரும் தமிழ் வீரர்கள் பலரின் பயிற்றுவிப்பாளராக வாஸ் BBK Cricket Mercantile அணியில் இணைந்து செயற்பட்டுவருவது வாழ்த்துக்குரிய ஒரு விடயம்.

தம்புளையில் பதற்ற நிலை-கேற்றை உடைத்து உள் நுழைந்த ரசிகர்கள்..!

தம்புள்ளையில் இன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான T20 போட்டிக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய அதிகளவிலான விளையாட்டு ரசிகர்கள் வருகை தந்ததால் தம்புள்ளை பிரதேச செயலகத்திற்கு அருகில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு..!{படங்கள்}

பருத்தித்துறை லீக்கின் அனுமதியுடன் மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் 09 நபர் கொண்ட வட மாகாண ரீதியிலான மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுன் ஆரம்ப நிகழ்வு இன்று(18.02.2024) இடம்பெற்றது.  மணற்காடு சென் அன்ரனிஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை  தேசியக்கொடி, கழக கொடி ஏற்றப்பட்டு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வு இனிதே ஆரம்பமானது. இதில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பொதுமக்கள்,வீரர்கள் என பலர் கலந்து கொண்டு மாபெரும் உதைபந்தாட்ட தொடரின் ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். மாபெரும் தொடரின் […]

அரையிறுதிக்கு தெரிவாகிய முல்லை மாவட்ட உதைபந்தாட்ட அணி..{படங்கள்}

COMMANDERS CUP -2024 Friendship challenge Trophy Football Tournament ஆல் நடத்தும் அணிக்கு பதினொரு பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் காலிறுதி போட்டி நேற்றையதினம் (17.02.2024)  யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. முதலாவது காலிறுதிப் போட்டியில் யாழ் லீக் மற்றும் முல்லை லீக் அணிகள் மோதியிருந்தது. இடைவேளையின் பின்னரான ஆட்டம் விறுவிறுப்பை பெற்றிருந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் 2-2 என்ற கோல்கணக்கில் சமநிலையில் போட்டி முடிவடைந்தது. சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் 4-3 […]

சர்வதேச மட்டத்தில் சாதிக்க செல்லும் வடக்கின் வேங்கைகள்-யாழ் மைந்தனும் உள்ளடக்கம்..!{படங்கள்}

மான்செஸ்டர் சிட்டி அபுதாபி கிண்ணம் ஆசியாவில் பிரீமியர் லீக் கிளப்பால் ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய ஜூனியர் உதைபந்தாட்ட போட்டிகளில் ஒன்றாகும், இத் தொடரில் இலங்கையின் முன்னணி உதைபந்தாட்ட அக்கடமிகளில் ஒன்றான Renown Football Academy ஊடாக வடக்கினைச் சேர்ந்த 12 வயதிற்குட்பட்ட நால்வர் தெரிவாகியுள்ளனர்.   -இதில் யாழ்.உரும்பிராய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த யா/வசாவிளான் மத்திய கல்லூரி மாணவன் தவராஜ் ரெஸ்மின் எனும் மாணவனே  (15:02:2024) அபுதாபி பயணமாகினார் 15ம் திகதி முதல் 22ம் திகதி வரை […]

உதயசூரியன் உள்ளூர் வெற்றிக்கிண்ணம் லைட்டிங் Boys வசம்…! {படங்கள்}

வடமராட்சி கிழக்கு உதய சூரியன் விளையாட்டுக் கழகம் நடாத்திய உள்ளூர் போட்டியின் இறுதி போட்டி இன்று மாலை 3.30மணியளவில் உதயசூரியன் மைதானத்தில் இடம்பெற்றது. ஈஸ்டன் கிங்ஸ் அணியை எதிர்த்து லைட்னிங் Boys அணியினர் மோதிய இறுதி போட்டியின் பிரதம விருந்தினராக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் திரு.செ.ராமச்சந்திரன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினர்களாக வத்திராயன் கிராம அலுவலர்,வடமராட்சி கிழக்கு உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர், வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்,சமுர்த்தி உத்தியோகத்தர் நடுவர் சங்க தலைவர் என பலரும் கலந்து […]

முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கபடி சுற்றுப்போட்டி.!

முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தின் முத்தமிழ் விளையாட்டு கழகத்தின் ஒழுங்குபடுத்தல்களுடன், கனடா வாழ் தமிழர் அருண் அவர்களின் முழுமையான நிதிப்பங்களிப்புடன், முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை ஆதரவுடன் முல்லைத்தீவு மாவட்ட கழகங்களுக்கு இடையில் பகலிரவாக சிறப்பான ஒழுங்கு படுத்தல்களுடன் நடைபெற்ற மாபெரும் ஆண்/பெண் கபடி சுற்றுப்போட்டிகள் 10,11.2.2024 கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்களில் இடம்பெற்றிருந்தன. ஆண்கள் 1ம் இடம் முத்தமிழன் விளையாட்டு கழகம், 2ம் இடம் யோகபுரம் விளையாட்டு கழகம். பெண்கள் 1ம் இடம் பாலிநகர் […]

ராகுலுக்கும் இஷானுக்கும் பனிப்போர்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து பாதியில் விலகினார். மனச்சோர்வு ஏற்பட்டதால் குடும்பத்துடன் நேரம் செலவிட விருப்பம் தெரிவித்து தொடரில் இருந்து பாதியில் விலகினார். அதன்பின் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகவில்லை. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் […]

உலகக்கோப்பைக்கு பின்னர் வார்னர் ஓய்வு

எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் ஓய்வு பெற உள்ளதாக தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 36 பந்துகளில் 70 ரன்கள் பதிவு செய்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 37 வயதான வார்னர், கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிட்னி மைதானத்தில் தனது கடைசி டெஸ்ட் […]

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்பம்.!

இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள உதைபந்தாட்ட சங்கங்களிற்கிடையிலான உதைபந்தாட்பட்ட சுற்றுப்போட்டி இன்று வைபவ ரீதியாக ஆரம்பமானது. இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கை விமாப்படைத் தளபதி எயா மார்சல் உதயநி ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைவாக “கொமான்டோஸ் கப்” வெற்றிக்கிண்ண நட்புறவு போட்டியின் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. 11 அணிகள் மோதிக்கொள்ளும் குறித்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் நிறைவடையவுள்ளது. குறித்த ஆரம்ப […]

பெத்தும் நிஸ்ஸங்க படைத்த சாதனை

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க ஒருநாள் போட்டிகளில் 200 ஓட்டங்களை கடந்த முதல் இலங்கை வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய கடந்த 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் இடம்பெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 189 ஓட்டங்களை பெற்றிருந்தமை சாதனையாக இருந்தது. இந்நிலையில், சனத் ஜயசூரியவின் சாதனையை முறியடித்தது மட்டுமல்லாது 200 ஓட்டங்களை கடந்த முதலாவது இலங்கை அணி வீரர் என்ற இரட்டை சாதனையை […]

RECENT NEWS

சபாநாயகருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாத் தீர்மானம்!

தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...