இலங்கை – இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார். மேலும் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...