யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது. இன்று காலை குறித்த தீவிபத்து ஏற்பட்டது வீடொன்றில் குப்பைக்கு வைக்கப்பட்ட தீயே பரவி அருகில் உள்ள சிறிய கடையொன்றில் சேதமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிறுது நேரத்தில் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீர் தாங்கி 12 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை – வலஸ்முல்ல பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயாவார். இவர் 14 வருடங்களாக இந்த ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 15 ஆம் திகதி இந்த ஹோட்டலின் சமையல் அறையில் இருந்து மதிய உணவுகளை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். இதன்போது இந்த ஹோட்டலின் மேல்மாடியில் […]
வாதுவை, பொத்துப்பிட்டிய காலி வீதி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (13) பகல் இடம்பெற்றுள்ளது. களுத்துறை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவைச் சேர்ந்த தீயணைப்பு வீர்ரகள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...