தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் தீயினால் பாதிக்கப்பட்டு தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானால் இன்று (14) வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக ‘முகவரி’ வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது. ஒலிரூட் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு தற்காலிக […]
திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பில் பாரிய முருகல் நிலைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில் அதுதொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று ஆலய காரியாலயத்தில் இடம்பெற்றது. திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாக சபை தெரிவு மற்றும் நிர்வாக சபையை ரத்துச் செய்வது தொடர்பில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் போடப்பட்ட வழக்கில் தங்களுக்கு எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ வழங்கப்படவில்லை என கோயில் நிர்வாகத்தின் தலைவர் சட்டத்தரணி திலகரட்ணம் துஷ்யந்தன் தெரிவித்தார். திருக்கோணேஸ்வர ஆலயத்தின் நிருவாகசபைக்கெதிரான வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (10)விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் 2023ம் ஆண்டின் நிருவாக தெரிவில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகசபையை ரத்துச் செய்ய கோரி இரண்டு இடைபுகு மனுதாரர்கள் வழக்கு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது ஆனால் எமக்கு இது தொடர்பான எந்தவொரு கட்டாணைகளோ கட்டளைகளோ அறிவித்தல்களோ மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்படவில்லை, இது இவ்வாறிருக்க கௌரவ மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா […]
சிறுவனைக் காணவில்லை பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள் கிண்ணியாவைச் சேர்ந்த 14வயதுடைய யூசுப் என்கிற சிறுவனை (03/03/2024) காலை 7:30 மணியிலிருந்து காணவில்லை. இவர் சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தவர்கள்: 0756887878 /0755278409 மேற்படி இலக்கங்களிற்கு தொடர்பு கொண்டு அறியத் தரவும்.
சாந்தனின் பூதவுடல் மாங்குளம் பிரதேசத்தை சென்றடைந்தது. பெருந்திரளான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இதனைதொடர்ந்து சற்றுமுன்னர் சாந்தனின் பூதவுடல் அடங்கிய ஊர்தி கிளிநொச்சி நோக்கி நகர்கிறது. இந்தியாவில் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வவுனியா போராளிகள் நலன்புரி சங்கத்திற்கு முன்பாகவும்,பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் வைக்கப்பட்டது. சாந்தனின் இறுதிக்கிரியை நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் இடம்பெறவுள்ளது. இந்த […]
திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் நேற்று (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இடது கால் அங்கவீனமான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. சடலத்தை இனம் காண்பதற்காக மக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் […]
திருகோணமலை- டொக்யாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று (01) மாலை கரையொதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த சடலத்தினை அவதானித்த காவல்துறையின் உயிர் காக்கும் படையினர் கடலுக்குச் சென்று குறித்த சடலத்தினை கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இது வரை இனங்காணப்படாத நிலையில் இடது கால் இழக்கப்பட்ட அங்கவீனமான ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது வரை மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் சடலத்தை இனம் […]
திருகோணமலை, பூநகர் பணிச்சங்குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஈச்சிலம்பற்று-பூமரத்தடிசேனை பகுதியில் வசித்து வரும் 33 வயதுடைய கனகசுந்தரம் விவேகானந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பூநகர்- பனிச்சங்குளம் குளத்திற்கு இன்று (28) காலை நண்பருடன் தாமரைப் பூ பறிப்பதற்காக பைபர் படகில் சென்ற போது பைபர் படகு கவிழ்ந்த நிலையில் இருவரும் நீரில் மூழ்கியதுடன் நண்பனை காப்பாற்ற முடியாத நிலையில் மற்றைய இளைஞன் நீந்தி கரைக்கு […]
திருகோணமலை முருகன் ஆலயத்தில் பூஜை வழிபடுகளை நடத்துவதற்கு முப்படையினர் தடைவித்துள்ளனர். மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் நிகழ்வு திருகோணமலை, தென்னமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் இடம்பெறுவது வழமை. இவ்வாறான நிலையில், இம்மாத பௌர்ணமி பொங்கல் நிகழ்வில் ஈடுபட முயன்ற பொதுமக்களே, முப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த முருகன் ஆலயப் பகுதி பௌத்த விகாரைக்கு உரியது எனவும் நீநிமன்ற தடை இருப்பதன் காரணமாக எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தே பெதுமக்கள் முப்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் […]
திருகோணமலை மாவிலாறு அணைக்கட்டுக்கு அருகில் மிதிவெடி ஒன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மிதிவெடியானது, மாவிலாறு யுத்தத்தின்போது புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது. மாவிலாறு அணைக்கட்டுக்கு சென்றவர்கள் மிதிவெடி ஒன்று இருப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய நிலையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்று மிதிவெடி மீட்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை திருகோணமலை கண்டி பிரதான வீதியின் கித்துள் ஊற்று பகுதியில் வேனும் ,டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வானில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் சென்ற வான், எதிர் திசையில் வந்த மணல் ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்த இருவர் கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும், காயமடைந்த […]
திருகோணமலை – மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியில் நேற்று (20) மாலை பாம்புக் கடிக்கு இலக்கான 23 வயதான கர்ப்பிணிப் பெண் ஒருவர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை...