கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கப்பலேந்தி மாதா ஆலய வின்சன்டி போல் சபையினர் ஒழுங்குபடுத்திய இலவச கண்பரிசோதனை முகாம் இன்று 24.02.2024  கட்டைக்காட்டில் நடைபெற்றது
கட்டைக்காடு பங்குத்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் மரியாள் மண்டபத்தில்  ஆரம்பமான குறித்த நிகழ்வில்யாழ் R.i.s கண்பரிசோதனை மையத்தின் வைத்தியர் Dr.ரகு இணைந்து கொண்டு  இலவச கண் பரிசோதனையை மேற்கொண்டதுடன் அதிக விலைக்கழிவில் மூக்குக்கண்ணாடிகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்
 இந்த இலவச கண் பரிசோதனை நிகழ்வில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை,ஆழியவளை வெற்றிலைக்கேணி,கட்டைக்காடு,கேவில் பிரதேச மக்கள் கலந்து கொண்டு இலவசமாக கண் சிகிச்சையை மேற்கொண்டு மூக்குக் கண்ணாடிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}-oneindia news கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}-oneindia news கட்டைகாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்..!{படங்கள்}-oneindia news