யாழ்ப்பாணம் தாவடி சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 06.15 மணியளவில் தாவடி சந்தியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.