சற்று முன் யாழில் கோர விபத்து-இளைஞன் கவலைக்கிடம்..!

காரைநகரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

 

பாடசாலை ஒன்றின் மரதன் ஓட்டப்போட்டி இன்று காலை நடைபெற்றது. இதன்போது மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்காக அவருக்கு அருகே குறித்த இளைஞன் துவிச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.

 

இந்நிலையில் மீசாலை பகுதியில் வைத்து அவர் மீது பேருந்து மோதியது. அவரை மோதிய பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தென்னை மரத்தையும் மோதியது.

 

இந்நிலையில் குறித்த இளைஞன் மிகவும் ஆபத்தான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பேருந்தின் சாரதி சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.