பெண் அதிகாரியை ‘அன்ரி ஏன் வேர்க்குது’ என கேட்ட அர்ச்சுனா! யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சலசலப்பு!

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தன நடத்தையினால் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் பல முறை குழப்பம் ஏற்பட்டது.

மக்கள் பிரச்சினைகளையும், அபிவிருத்தி விவகாரங்களையும் ஆராய வேண்டிய அந்த இடத்தை பேஸ்புக்கில் லைவ் வீடியோவில் அலட்டுவதை போல அர்ச்சுனா வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டிருந்ததால், ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் எதற்கும் பலனற்ற ஒன்றைப் போல தோன்றியது.

தன்னை முன்னிலைப்படுத்த வேண்டுமென்ற மனநிலை, பல விவகாரங்களில் அடிப்படை புரிதல் இல்லாத நிலைமையினால், வழக்கம் போல இன்றும் அர்ச்சுனா பெரும்பாலும் பிரயோசனமற்றதாக உளறிக் கொண்டிருந்தார்.

வடக்கு அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் யார் என்று தெரியாமல் நீங்கள் யாரென கேட்டதுடன், மக்கள் உங்களை நிராகரித்து விட்டார்கள், நீங்கள் மக்கள் பிரதிநிதியாக வருவதற்கு முயற்சியுங்கள் என்றார்.

பெண் அரச அதிகாரியொருவரை பார்த்து, அன்ரிக்கு ஏன் வியர்க்கிறது என கேட்டதால், அரச அதிகாரிகள் கூட்டாக அர்ச்சுனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவன் பைத்தியக்காரனை கூட்டத்தை விட்டு வெளியேற்றுங்கள் என சத்தமிட்டனர்