யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}

வடமராட்சி கிழக்கு மாமுனை கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் திடீர் சுற்றிவளைப்பு ஒன்றை முன்னெடுத்தனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து கடந்த 16.02.2024 வெள்ளிக்கிழமை மாமுனை கடற்பகுதியில் இருந்து சட்டவிரோத கணவாய் கொப்புகளை ஏற்றிக் கொண்டு கடலுக்கு செல்ல முற்பட்ட போது ஆறுபேர் படகுகளுடன் கைது செய்யப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறுகிய காலத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவருவதாக உறுதியளித்த கடற்படையினர் தொடர்ந்து கடல்,தரை என திடீர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு பலரை கைது செய்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே மாமுனை பகுதியில் குறித்த ஆறுபேரும் கடற்படையால் கைது செய்யப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தாளையடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}-oneindia news யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}-oneindia news யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}-oneindia news யாழில் கணவாய் கொப்புகளுடன் சிக்கிய அறுவர்..!{படங்கள்}-oneindia news