யாழில் வீட்டை சுத்து போட்டு இளைஞனை தூக்கிய பொலிசார்..!

நேற்றிரவு சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுன்னாகம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு கிலோ கேரளக் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இதன்போது சந்தேகநபர் ஒராவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட போதூப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரிம் ஒப்படைக்கப்பட்டார். அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.