யாழ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடன் தென்னிலங்கை இளைஞர் தலைமறைவு ..!{படங்கள்}

நெல்லியடி பகுதியில் பூ கடையில் பணிபுரிந்து வந்த தென்னிலங்கை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிய மோட்டார்சைக்கிளுடன் தலைமறைவாகிய சம்பவம் பதிவாகியுள்ளது

கரணவாய் சோழங்கன் பகுதியைச் சேர்ந்த உலகநாதன் பார்த்தீபன் என்ற இளைஞருடன் நட்பாக பழகிவந்துள்ளார்
தலைமறைவான தென்னிலங்கை
இளைஞர் 13-02-2024 அன்று சம்பவதினம் கடை ஒன்றில் உணவுப் பொருட்கள் வாங்கி வர மோட்டார் சைக்கிளை தருமாறு கேட்டுள்ளார்

நட்பாக பழகிய காரணத்தினால் தனது Pulsar 220 black colour பெறுமதி ரூபா 700,000 , வகை மோட்டார் சைக்கிளை கரணவாய் சோழங்கன் இளைஞர் கொடுத்துள்ளார் குறித்த தென்னிலங்கை இளைஞர் மோட்டார் சைக்கிளுடன் தலைமறைவாகியுள்ளார்

அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை , அவர் பணிபுரிந்த பூ கடைக்கும் குறித்த இளைஞர் வருவதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது இச் சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடன் தென்னிலங்கை இளைஞர் தலைமறைவு ..!{படங்கள்}-oneindia news யாழ் பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மோட்டார் சைக்கிளுடன் தென்னிலங்கை இளைஞர் தலைமறைவு ..!{படங்கள்}-oneindia news