யாழ்.பல்கலையில் உணவுத்திருவிழா…!!!

யாழ்.பல்கலையில் உணவுத்திருவிழா...!!!-oneindia news
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர் ஒன்றியத்தினால், 2024 Macos  நிகழ்வின் ஒருபகுதியாக நிதி சேகரிப்பதற்காக வாகன சுத்திகரிப்பு நிகழ்வும் (Car Wash) உணவுத் திருவிழாவும் (Food Festival) நேற்றைய தினம் (31) பல்கலைக்கழக பிரதான வாயில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

மாணவர்களின் கலை, விளையாட்டு உள்ளிட்ட இணைபாடவிதான ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் முகமாக வருடாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் Macos நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக இந்த வாகன சுத்திகரிப்பும் உணவுத்திருவிழாவும் நேற்று நடைபெற்று முடிந்தது.

முகாமைத்துவ மற்றும் வணிக பீட மாணவர்களினல் இந்த வாகன சுத்திகரிப்பு நிகழ்வு மூன்றாவது முறையாகவும் உணவுத்திருவிழா முதல் முறையாகவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர்.சிவக்கொழுந்து    ஸ்ரீசற்குணராஜா, முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதி உட்பட பல விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் சேகரிக்கப்பட்ட நிதி, பொருண்மியம் நலிந்தோருக்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழக சமுதாய சமையலறைக்கும் (Community Kitchen) நன்கொடையளிப்பதற்கு பயன்படுத்தப்படும். இந்நிகழ்வில் சமூக நலன் கருதி நிதிப்பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாணவர்களால் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.யாழ்.பல்கலையில் உணவுத்திருவிழா...!!!-oneindia news