47சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது தினமான இன்று (30) யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு முன்னால், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளை ஏந்தி, வாய்களை கறுப்பு துணியால் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்கள் , விரிவுரையாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
யாழ் . விசேட நிருபர்