யாழ் போதனாவைத்தியசாலைக்குள் கடல் புகுந்ததா? பரபரப்பு காட்சிகள்!!

தற்போதய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் யாழ் போதனாவைத்தியசாலைக்கு சென்று அங்குள்ள நிலைமைகளை அவதானித்துள்ளாராம்.

ஏற்கனவே யாழ்ப்பாண நாட்டமையாக இருந்த டக்ளஸ்தேவானந்தாவும் தனது அமைச்சுக்குள்ள அதிகார எல்லைகளைத் தாண்டி ஏனைய அதிகாரத் தரப்புக்குள்ளும் புகுந்து நாட்டமை வேலை செய்து இப்போது நடுத்தெருவில் நிறுத்தப்பட்டுள்ளார்.

தென்பகுதி அதிகாரத்தரப்புடன் புறோக்கர் வேலை செய்து தமக்கு எந்தவித உதவிகளும் செய்யத் தேவையில்லை எனக் கருதியே வடக்குத் தமிழ் மக்கள் தென்னிலங்கை அரசசார்பு கட்சிகளைப் புறக்கணித்து நேரடியாகவே தென்னிலங்கை கட்சிக்கு வாக்களித்திருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் மீன்பிடி அமைச்சர் கடற்தொழிலை மேம்படுத்தும் செயற்பாட்டை பார்ப்பதை மட்டும் கருத்தில் எடுக்க வேண்டும் என சமூகவலைத்தளங்களில் பதிவுகள் வெளியாகியுள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலையின் சுகாதாரச் செயற்பாடுகளை சுகாதார அமைச்சு கவனித்துக் கொள்ளும் எனவும் சமுகவலைத்தளத்தில் பலர் பதிவுகளை வெளியிட்டுள்ளார்கள். சுகாதார அமைச்சுக்கு சந்திரசேகரன் புறோக்கர் வேலை செய்யத் தேவையில்லை எனவும் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் மிக விரைவில் நேரில் விஜயம் மேற்கொண்டு , சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வார் என கடற்தொழில் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

யாழ் . போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை நேரில் விஜயம் மேற்கொண்ட கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் , வைத்தியசாலையின் சேவை நிலைமைகளை நேரில் ஆராய்ந்தார்.

வைத்தியசாலையின் வளர்ச்சி மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைகளை வைத்திய சாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சாத்தியமூர்த்தியிடம் நேரடியாக கேட்டறிந்த அவர், சாதகமான மாற்றங்களை கொண்டுவர சுகாதார அமைச்சருடன் கலந்துரையாடி, தன்னால் முடிந்த எல்லாவற்றையும் மேற்கொள்ளவதாக உறுதி அளித்தார்.

அத்துடன், சுகாதார அமைச்சர் வைத்தியர்.நளின்த ஜயதிஸ்ஸ விரைவில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இதன்மூலம் சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதற்கான மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மீன்பிடி அமைச்சரே!! நீர் வைத்தியசாலைக்குள் புகுந்து சீன் போடாது மிகவும் துன்பநிலையில் உள்ள வடக்கு பகுதி மீனவர்களின் பிரச்சனைகளை கவனித்துக் கொள்ளுங்கள். அங்குள்ள குடும்பங்களின் ஏழ்மை நிலையை அவதானியுங்கள். தென்பகுதி மீனவர்களின் பிரச்சனைகளைக் கவனித்துக் கொள்ளுங்கள். யாழ்ப்பாணம் மட்டும் உமக்கு உரிய பிரதேசம் அல்ல. மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, காலி, மாத்தறை போன்ற பிரதேசங்களில் வாழும் மீனவர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்… ஆஸ்பத்திரி வசதிகளை அந்த துறை அமைச்சர் மேற்கொள்வார்… இவ்வாறு சமூகவலைத்தளங்களில சந்திரசேகரனுக்கு ஆலோசனை கூறும் பதிவுகள் பல இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.